பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் வெள்ளிக்கிழமை தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: PM Modi’s aircraft faces technical snag in Jharkhand’s Deoghar
இந்த சிக்கலால் விமானம் தியோகர் விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது, இதன் விளைவாக மோடி டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
முன்னதாக, பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் 6,640 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்.
பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாளையொட்டி, ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ என கொண்டாடப்படும் விழாவில் கலந்து கொள்வதற்காக மோடி அந்த மாவட்டத்திற்கு வந்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“