மோடி அமைச்சரவையின் முதல் கூட்டம் : அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை

இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 14.4 கோடி விவசாய பெருமக்கள் பயனடைவர்.

By: Updated: May 31, 2019, 09:36:16 PM

தேசிய பாதுகாப்பு நிதியின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவி தொகையை உயர்த்த வழங்கிட பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த முதல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி, நேற்று (30ம் தேதி) ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக பதவியேற்றார். ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட 57 பேர் பதவியேற்றனர். ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்புத்துறை, அமித் ஷாவிற்கு உள்துறை, நிர்மலா சீத்தாராமனுக்கு நிதித்துறை, ஜெய்சங்கருக்கு வெளியுறவுத்துறை என அனைவருக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன.

இதனிடையே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம், 31ம் தேதி மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு நிதியின் கீழ் வழங்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி ஆண்டுதோறும் 500 பேர் தேர்வு செய்யப்படுவர். இந்த திட்டத்தில் மாணவர்களுக்கான உதவி தொகையான ரூ.2 ஆயிரத்தை 2,500 ஆக உயர்த்துவது மற்றும் மாணவிகளுக்கான நிதி ரூ.2 ஆயிரத்து 250 லிருந்து 3 ஆயிரமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் நக்சல்கள், பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியாகும் வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவது, நிதி வழங்குவதை மாநில போலீசாரின் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்துவது என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை :

மோடி முதல்முறையாக பிரதமர் பதவி வகித்தபோது தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், Pradhan Mantri Kisan Samman Siddhi (PMKSS) திட்டத்திற்கு ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் மூலம் 2 ஏக்கர் நிலம் கொண்ட விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் ( 3 தவணைகளாக ரூ.2ஆயிரம் ) வழங்கப்பட திட்டமிட்டது. 3.11 கோடி விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 14.4 கோடி விவசாய பெருமக்கள் பயனடைவர். இதற்காக ஆண்டிற்கு ரூ.87 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 5 கோடி விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவிலான ஓய்வூதிய திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Pm modis first order pm approves hike in scholarships

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X