scorecardresearch

மன் கி பாத்: வானொலி நிகழ்ச்சிக்கு பின்னால்… எழுத்து, மொழியாக்கம், தூக்கமில்லா இரவுகள்

தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவில் இருந்தபோது, முன் பதிவு செய்யப்பட்ட வானொலி உரை நாடு முழுவதும் உள்ள நேயர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.

Tamil News
Tamil News Updates

தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவில் இருந்தபோது, முன் பதிவு செய்யப்பட்ட வானொலி உரை நாடு முழுவதும் உள்ள நேயர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை காலை ஒலிபரப்பான மன் கி பாத்தின் 100வது பகுதி நிகழ்ச்சி முடிவில் பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலி குழுவிற்கு நன்றி தெரிவித்தார், அவர், “இந்த முழு நிகழ்ச்சியையும் மிகுந்த பொறுமையுடன் பதிவுசெய்தார்” என்று கூறினார்.

தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவில் இருந்தபோது, முன் பதிவு செய்யப்பட்ட வானொலி நிகழ்ச்சியின் செய்தி நாடு முழுவதும் உள்ள நேயர்களுக்காக காலை 11 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தின் புறநகரில் உள்ள பரேஜா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் 100வது பகுதி உரையை மக்கள் கேட்டபோது (எக்ஸ்பிரஸ் புகைப்படம் – நிர்மல் ஹரீந்திரன்)

உண்மையில், இந்தத் திட்டம் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளியன்று பதிவு செய்யப்படும், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒதுக்கபட்ட நேரத்தில் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் நெட்வொர்க்குகள் முழுவதும் ஒளிபரப்பப்படும்.

“இது முழுப் பதிவும் குளறுபடிகள் அல்லது பிழைகள் இல்லாமல் உள்ளதா என்பதைச் சரிபார்க்க அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கிறது. மற்ற மொழிகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பு செய்ய முடியுமா” என்று பல ஆண்டுகளாக நிகழ்ச்சியில் பணியாற்றிய அகில இந்திய வானொலியின் அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

மன் கி பாத் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் – நிர்மல் ஹரீந்திரன்)

அகில இந்திய வானொலியின் ஒரு சிறிய குழு – இது தொழில்நுட்ப உதவி, நிகழ்ச்சி தயாரிப்பு அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு தலைவர்கள் போன்ற ஏழு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது – வெள்ளிக்கிழமைகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட திட்டமிடப்பட்ட நேர இடைவெளியில் பிரதமரின் இல்லத்திற்குள் கட்டப்பட்ட ஸ்டுடியோவுக்குச் செல்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

பிரதமர் மோடி வானொலி நிகழ்ச்சியை சனிக்கிழமை எப்படி பதிவு செய்கிறார் என்பதைக் காட்டும் வீடியோவை அரசாங்கம் வெளியிட்டது. வீடியோவில், ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்குச் செல்வதற்கு முன், தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவுடன் பிரதமர் உரையாடுவதைக் காணலாம். பின்னர் எந்த எழுத்து வடிவமும் இல்லாமல் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

“பிரதமர் சில குறிப்புகளுடன் ஒரு சிறிய டைரியுடன் நடந்து செல்கிறார். அவர் எந்த தடங்கலும் இடைவெளியும் இல்லாமல் சரளமாகவும் தன்னிச்சையாகவும் பேசினார்” என்று ஒரு வட்டாரம் கூறியது.

உரையின் உள்ளடக்கம் பிரதமர் அமைச்சக அலுவலகத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. அகில் இந்திய வானொலிக்கு நேரடி பங்கு இல்லை என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதிக்குள், முந்தைய பகுதியில் கேட்பவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைத் தொகுத்து, பிரதமர் அலுவலகத்தில் உள்ள ‘மன் கி பாத் செல்லுக்கு’ அனுப்புகிறார்கள்.

பல சமயங்களில், வானொலி கேட்பவர்களும் பிரதமருக்கு வரவிருக்கும் பகுதிகளில் என்ன பாடங்கள் மற்றும் தலைப்புகளைப் பற்றி பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள்; இது ஒரு வழக்கமான, வாராந்திர அடிப்படையில் மேலும் அனுப்பப்படுகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சியை முடிப்பதற்கு முன் அகில இந்திய வானொலி குழுவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் அத்தியாயங்களை மிகக் குறுகிய காலத்தில் வெவ்வேறு பிராந்திய மொழிகளில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். உரை முடிந்தவுடன், அது அந்தந்த பிராந்திய மொழிகளில் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.

முன்னதாக, இது ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு பிராந்திய டிடி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், மன் கி பாத் நிகழ்ச்சியின் முதல் சில ஆண்டுகளுக்குப் பிறகு, அகில இந்திய வானொலியின் பிராந்திய மொழிகளில் கேட்பவர்களும் டிடியைப் பார்ப்பவர்களும் தவறவிடுகிறார்கள் என்பதை உணர முடிந்தது. தென்னிந்தியாவில் ஹிந்தியுடன் தொடர்பு கொள்ளாதவர்கள் அதிகம் என்பதால், முக்கிய ஹிந்தி ஒளிபரப்பு காலை 11:30 மணிக்கு முடிந்தவுடன் பிராந்திய மொழிகளில் ஒளிபரப்ப ஒரு உத்தரவு வந்தது” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

உண்மையில், பிரதமருடனான நிகழ்ச்சியின் பதிவு முடிந்ததும் அகில இந்திய வானொலி குழுவிற்கு அந்த நேரத்துக்கான உண்மையான ஓட்டம் தொடங்குகிறது. மொழியாக்கம் மற்றும் எழுத்துக்காக காட்சிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இது வழக்கமாக நிறைய நேரம் எடுக்கும், பெரும்பாலும் அதிகாலை 2.30-3 மணி வரை நடக்கும்” என்று வட்டாரங்கள் கூறியது.

பின்னர் அவர்கள் எழுதியதைத் தொகுத்து, பிழை திருத்தம், எழுத்துப் பிழைகளை சரிபார்த்து, எதுவும் தவறவிடப்படவில்லை அல்லது மீண்டும் மீண்டும் வரவில்லை என்பதை உறுதிசெய்து, மொழிபெயர்ப்பிற்காக பிராந்திய மையங்களுக்கு அனுப்புவார்கள்.

இறுதி எழுத்து வடிவம் சனிக்கிழமை காலை தூர்தர்ஷனுக்கு அனுப்பப்பட்டு, நிகழ்ச்சியுடன் ஒளிபரப்பப்படும் காட்சிகளை ஒன்றிணைக்க, உதாரணமாக, ஷோவில் பிரதமரால் குறிப்பிடப்பட்ட மாற்றங்களை உருவாக்குபவர்கள்.

இதற்கிடையில், இறுதிப் பதிவும் பிரதமர் அலுவலகத்துக்கு அனுமதி பெற அனுப்பப்பட்டது. ஏதாவது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றால், அது இந்த கட்டத்தில் செய்யப்படுகிறது. உண்மையில், ஒன்று அல்லது இரண்டு முறை, நல்ல தெளிவுக்காக மீண்டும் ஓரிரு வாக்கியங்களைப் பேசுமாறு பிரதமரிடம் கோரப்பட்டது, அதைச் செய்வதில் அவர் மகிழ்ச்சியடைந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Pm modis mann ki baat behind the radio show scripting translating and sleepless nights

Best of Express