குஜராத் மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர் பாட்டீல் மற்றும் குஜராத் முதல்வரின் முதன்மைச் செயலாளர் பூபேந்திர படேல் ஆகியோர், மோடியின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துமனைக்கு இன்று பிற்பகல் வந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபா-வுக்கு 100 வயதாகிறது. மோடியின் தாயார் ஹீராபென் புதன்கிழமை காலை அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் மற்றும் குஜராத் முதல்வரின் முதன்மைச் செயலாளர் பூபேந்திர படேல் ஆகியோரும் பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்தனர். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேலும் மருத்துவமனைக்கு வந்தார். குஜராத் முதலமைச்சரும் மோடியின் தாயார் ஹீராபென் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் இருந்தார்.
ஹீராபா தனது ஓய்வுபெற்ற குஜராத் அரசு அதிகாரி இளைய மகன் பங்கஜ், குஜராத் மாநிலத்தின் காந்திநகர் மாவட்டத்தில் உள்ள ரைசனில் வசித்து வருகிறார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்னதாக, டிசம்பர் 4-ம் தேதி அவரை மோடி கடைசியாகச் சந்தித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”