மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் வெட்கக்கேடான அலட்சியம் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியை (I N D I A ) சேர்ந்த 21 எம்.பி.க்கள் குழு ஞாயிற்றுக்கிழமை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்தது.
தொடர்ந்து, நிவாரண முகாம்களுக்குச் சென்று மே தொடக்கத்தில் இருந்து மாநிலத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினர்.
அவர்கள் ஒரு குறிப்பாணையையும் சமர்ப்பித்தனர், மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்புநிலையை மீட்டெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர், மேலும் "கடந்த 89 நாட்களாக மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது" என்று தெரிவித்தனர்.
மேலும், சுராசந்த்பூர், இம்பால் மற்றும் மொய்ராங் ஆகிய இடங்களில் உள்ள நிவாரண முகாம்களை தூதுக்குழு பார்வையிட்டதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “மோதல்கள் தொடங்கியதில் இருந்து இரு தரப்பினராலும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட தனிநபர்களின் கவலைகள், நிச்சயமற்ற நிலைகள், வலிகள் மற்றும் துயரங்களை கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைகிறோம்.
அனைத்து சமூகத்தினரிடையேயும் ஒரு கோபமும், அந்நியமான உணர்வும் உள்ளது, இது தாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், “கடந்த மூன்று மாதங்களாக தொடரும் இணையதள தடை, தற்போதுள்ள அவநம்பிக்கையை மேலும் அதிகப்படுத்திய ஆதாரமற்ற வதந்திகளை அதிகப்படுத்துகிறது. மாண்புமிகு பிரதமரின் மௌனம் மணிப்பூரில் நடந்த வன்முறையில் அவரது வெட்கக்கேடான அலட்சியத்தைக் காட்டுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இக்குழு இரண்டு நாள் பயணமாக மாநிலம் வந்துள்ளது. இது குறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சனிக்கிழமை (ஜூலை 29) கூறுகையில், “இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்காகவே நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை சீக்கிரம் மீட்டெடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்… மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me