/indian-express-tamil/media/media_files/Vw0Tz9po2H2OqacleP0W.jpg)
பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் ஜே.டி.யு தலைவர் நிதிஷ் குமார் (Photo: PTI)
பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9-ம் தேதி மாலை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ஜூன் 8-ம் தேதி விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இப்போது அது ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலத்தில் படிக்க: PM Modi’s swearing-in could be moved to June 9; Naidu postpones his
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் 8,000-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.
மற்ற நாடுகளின் தலைவர்களின் அட்டவணையை மனதில் வைத்து இறுதி தேதி மற்றும் நேரம் இன்னும் தயாரிக்கப்படுவதாக வட்டாரங்கள் கூறுகின்றன. இன்றைய நாளின் இறுதிக்குள் அவர்களின் அட்டவணை முடிந்ததும், இறுதி தேதி மற்றும் நேரத்தை இறுதி செய்ய முடியும். ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் பல பிரமுகர்கள் வெளியேற வேண்டியிருந்தால், ஞாயிற்றுக்கிழமை காலை ராஷ்டிரபதி பவனில் விழாவை நடத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், ஆந்திர பிரதேச முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் என் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு ஜூன் 9-லிருந்து ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. ஏனெனில், அவர் முதலில் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளார்.
டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, அவசரமாக அமராவதிக்கு செல்வதை நாயுடு தவிர்க்க விரும்புவதாக தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே. பட்டாபி ராம் தெரிவித்தார். மாநில தலைநகரில் நடைபெறும் விழாவிற்கு பா.ஜ.க தலைவர்கள் பலரையும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் அழைத்துள்ளார்.
“அவர் ஜூன் 12-ம் தேதி பதவியேற்பார். சந்திரபாபு ஜூன் 7-ம் தேதி என்.டி.ஏ நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்திற்காக டெல்லியில் இருப்பார். ஜூன் 8-ம் தேதி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார். அதற்குப் பிறகு ஒரு நாள் கழித்து அமராவதிக்குத் திரும்பி வந்து ஜூன் 12-ல் பதவியேற்பார்” என்று பட்டாபி ராம் கூறினார்.
முதன்முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜன சேனா கட்சி (ஜே.எஸ்.பி) தலைவர் கே. பவன் கல்யான், சந்திரபாபு நாயுடுவுடன் புது டெல்லி செல்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.