PM Modi Address to Nation Today Updates: நாட்டின் பொருளாதாரத்தை நிலை படுத்துவதற்கும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் வர்த்தகர்களின் நிலையை மேம்படுத்துவதற்கும் 20 லட்சம் கோடி மதிப்பிலான தன்னிறைவு இந்தியா திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்தார்.
Watch LIVE ????
Prime Minister @narendramodi addresses the nation#IndiaFightsCorona
Watch at????https://t.co/plFbFriXoC
— PIB India #StayHome #StaySafe (@PIB_India) May 12, 2020
PM Modi Speech Live
அவரது உரையில், "கொரோனாவுடன் போராடி உயிரிழப்பையும் தடுக்க வேண்டும், அதேசமயம் முன்னேறவும் வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக இந்த வைரஸுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது.
கொரோனா பாதிப்பு தொடங்கிய போது பிபிஏ உடைகள் கிடையாது. தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் உற்பத்தி செய்யப்படுகிறது. யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என்று 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு அளிக்கப்படும். உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் அளிப்பதில் இந்தியா முக்கிய இடம்பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்" என்று தெரிவித்த மோடி, நான்காவது பொது முடக்கம் குறித்தும் அறிவித்துள்ளார்.
Live Blog
India lockdown Updates: பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு அளிக்கப்படும். உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் அளிப்பதில் இந்தியா முக்கிய இடம்பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் - பிரதமர் மோடி
"ஒரு நாளைக்கு 2 லட்சம் மருத்துவ பாதுகாப்பு கவசம் மற்றும் N95 கவசம் தயாரிக்கும் நாடாக இருக்கிறோம்"
"y2k பிரச்னையை எப்படி கடந்து வந்தோமோ, அதே போல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்"
"இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது"
- பிரதமர் மோடி
ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. இந்த பொருளாதார திட்டத்திற்கு நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கம் கிடைக்கும். - பிரதமர் மோடி
கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும். உலக நாடுகளை மண்டியிட வைத்துவிட்டது கொரோனா எனும் ஒரு வைரஸ். இந்தியா ஒரு சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும். எதையும் செய்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
- பிரதமர் மோடி உரை
கொரோனாவுடன் போராடி உயிரிழப்பையும் தடுக்க வேண்டும், அதேசமயம் முன்னேறவும் வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக இந்த வைரஸுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது - பிரதமர் மோடி
நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி....
Watch LIVE 📡
Prime Minister @narendramodi addresses the nation#IndiaFightsCorona
Watch at👇https://t.co/plFbFriXoC
— PIB India #StayHome #StaySafe (@PIB_India) May 12, 2020
மகாராஷ்டிரா, தெலங்கானா, பஞ்சாப், மேற்கு வங்க மாநில முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்க பிரதமரிடம் கோரியுள்ளனர். பல முதல்வர்கள் லாக்டவுனில் தளர்வுகள் இருக்க வேண்டும், கரோனா மண்டலங்களை பிரிப்பதை மாநில அரசுகள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மாநிலங்களுக்கு இடையே பேருந்துப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து இயக்கும் முன் மாநில அரசுகளைக் கலந்தாய்வு செய்யாமல் முடிவு செய்யக்கூடாது என சத்தீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா, பிஹார், தமிழக முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
லாக்டவுனை எவ்வாறு படிப்படியாகத் தளர்த்துவது குறித்து மாநில முதல்வர்கள் செயல்திட்டத்தை தயாரித்து அனுப்பவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஆதலால், இன்றைய உரையில் 3-வது லாக்டவுன் முடிந்த பின் அடுத்த கட்டமாக மக்களிடம் என்ன அரசு என்ன எதிர்பார்க்கிறது, லாக்டவுன் குறித்த அறிவிப்பு போன்றவற்றை பிரதமர் மோடி பேசலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள லாக்டவுனின் 3-வது கட்டம் இந்த வாரத்தில் முடியவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்.
Prime Minister Shri @narendramodi will address the nation tonight at 8 pm.
Watch LIVE at
• https://t.co/vpP0MI6iTu
• https://t.co/KrGm5hWgwn
• https://t.co/jtwD1yPhm4 pic.twitter.com/VZPtzo91Uo— BJP (@BJP4India) May 12, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights