ரூ20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டங்கள்: பிரதமர் மோடி உரை ஹைலைட்ஸ்

PM Modi Speech Updates: ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் வர்த்தகர்களின் நிலையை மேம்படுத்துவதற்கும் 20 லட்சம் கோடி மதிப்பிலான தன்னிறைவு இந்தியா திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்தார்.

By: May 13, 2020, 7:16:41 AM

PM Modi Address to Nation Today Updates: நாட்டின் பொருளாதாரத்தை நிலை படுத்துவதற்கும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் வர்த்தகர்களின் நிலையை மேம்படுத்துவதற்கும் 20 லட்சம் கோடி மதிப்பிலான தன்னிறைவு இந்தியா திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்தார்.

PM Modi Speech Live

அவரது உரையில், “கொரோனாவுடன் போராடி உயிரிழப்பையும் தடுக்க வேண்டும், அதேசமயம் முன்னேறவும் வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக இந்த வைரஸுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது.

கொரோனா பாதிப்பு தொடங்கிய போது பிபிஏ உடைகள் கிடையாது. தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் உற்பத்தி செய்யப்படுகிறது. யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என்று 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு அளிக்கப்படும். உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் அளிப்பதில் இந்தியா முக்கிய இடம்பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்” என்று தெரிவித்த மோடி, நான்காவது பொது முடக்கம் குறித்தும் அறிவித்துள்ளார்.

Live Blog
India lockdown Updates: பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி
20:39 (IST)12 May 2020
நான்காவது பொது முடக்கம்

நான்காவது பொதுமுடக்கத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. ஆனால், இதன் விதிமுறைகள் முற்றிலும் மாறுபடும். அவை என்னென்ன என்று மே 18க்கு முன்பு அறிவிக்கப்படும்.

20:34 (IST)12 May 2020
உள்நாட்டு தொழில்துறை உற்பத்தியே உதவி செய்தது

கொரோனா பாதிப்பை சமாளிக்க நமக்கு உள்நாட்டு தொழில்துறை உற்பத்தியே உதவி செய்தது. உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் விற்பனை, உள்ளூர் விநியோகம் - இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் - பிரதமர் மோடி

20:30 (IST)12 May 2020
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு....

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு அளிக்கப்படும். உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் அளிப்பதில் இந்தியா முக்கிய இடம்பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் - பிரதமர் மோடி

20:24 (IST)12 May 2020
இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்

"ஒரு நாளைக்கு 2 லட்சம் மருத்துவ பாதுகாப்பு கவசம் மற்றும் N95 கவசம் தயாரிக்கும் நாடாக இருக்கிறோம்"

"y2k பிரச்னையை எப்படி கடந்து வந்தோமோ, அதே போல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்"

"இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது"

- பிரதமர் மோடி

20:23 (IST)12 May 2020
ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள்

ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. இந்த பொருளாதார திட்டத்திற்கு நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கம் கிடைக்கும். - பிரதமர் மோடி

20:21 (IST)12 May 2020
இதுவே சரியான தருணம்

வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே சரியான தருணம்; நாம் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - மோடி

20:19 (IST)12 May 2020
தற்சார்பு இந்தியாவின் கலாச்சாரம்

நாம் நம்மை தற்காத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும். 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான காலம். தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாச்சாரம் - பிரதமர் மோடி

20:18 (IST)12 May 2020
130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும்

கொரோனா பாதிப்பு தொடங்கிய போது பிபிஏ உடைகள் கிடையாது. தற்போது நாள் ஒன்றுக்கு 2 லட்சம் உற்பத்தி செய்யப்படுகிறது. யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என்று 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும் - பிரதமர் மோடி

20:14 (IST)12 May 2020
நம்பிக்கை ஒளி

உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை அளித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு வித்திடும். ஒரு முக்கிய வாய்ப்பை நமக்கு இந்த வைரஸ் கொடுத்துள்ளது - பிரதமர் மோடி

20:11 (IST)12 May 2020
உலக நாடுகளை மண்டியிட வைத்துவிட்டது

கொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும். உலக நாடுகளை மண்டியிட வைத்துவிட்டது கொரோனா எனும் ஒரு வைரஸ். இந்தியா ஒரு சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும். எதையும் செய்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

- பிரதமர் மோடி உரை

20:10 (IST)12 May 2020
போரை தொடர வேண்டியுள்ளது

கொரோனா தொற்று ஏற்பட்டு 4 மாதங்கள் கடந்துவிட்டது!

கொரோனா வைரஸுக்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது!

நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது!

யாரும் எதிர்பாராத விபரீதம் இது!

- பிரதமர் மோடி உரை

20:09 (IST)12 May 2020
இந்தியா போராடி வருகிறது

கொரோனாவுடன் போராடி உயிரிழப்பையும் தடுக்க வேண்டும், அதேசமயம் முன்னேறவும் வேண்டும். கடந்த நான்கு மாதங்களாக இந்த வைரஸுக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது - பிரதமர் மோடி

20:06 (IST)12 May 2020
பாடம் கற்றுக் கொடுத்த கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு 3 லட்சம் உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. உயிர்களை காப்பாற்ற உலகமே தற்போது முயற்சி செய்து வருகிறது.

20:00 (IST)12 May 2020
பிரதமர் மோடி உரை நேரலை....

நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி....

19:45 (IST)12 May 2020
லாக்டவுனை நீட்டிக்க கோரிக்கை

மகாராஷ்டிரா, தெலங்கானா, பஞ்சாப், மேற்கு வங்க மாநில முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்க பிரதமரிடம் கோரியுள்ளனர். பல முதல்வர்கள் லாக்டவுனில் தளர்வுகள் இருக்க வேண்டும், கரோனா மண்டலங்களை பிரிப்பதை மாநில அரசுகள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

19:44 (IST)12 May 2020
மாநில அரசுகளைக் கலந்தாய்வு செய்யாமல் முடிவு செய்யக்கூடாது

மாநிலங்களுக்கு இடையே பேருந்துப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து இயக்கும் முன் மாநில அரசுகளைக் கலந்தாய்வு செய்யாமல் முடிவு செய்யக்கூடாது என சத்தீஸ்கர், கர்நாடகா, ஆந்திரா, பிஹார், தமிழக முதல்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

19:28 (IST)12 May 2020
லாக்டவுன் நீட்டிக்கப்படுமா?

லாக்டவுனை எவ்வாறு படிப்படியாகத் தளர்த்துவது குறித்து மாநில முதல்வர்கள் செயல்திட்டத்தை தயாரித்து அனுப்பவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். ஆதலால், இன்றைய உரையில் 3-வது லாக்டவுன் முடிந்த பின் அடுத்த கட்டமாக மக்களிடம் என்ன அரசு என்ன எதிர்பார்க்கிறது, லாக்டவுன் குறித்த அறிவிப்பு போன்றவற்றை பிரதமர் மோடி பேசலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

19:25 (IST)12 May 2020
இரவு 8 மணிக்கு உரை...

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள லாக்டவுனின் 3-வது கட்டம் இந்த வாரத்தில் முடியவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

Web Title:Pm narendra modi address to nation live updates lockdown covid 19 corona virus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X