ரஷ்ய -உக்ரைன் போருக்கு பிறகு உக்ரன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி முதல் முறையாக, ஜி- 7 மாநாட்டில் சந்தித்து பேசியுள்ளார்.
Advertisment
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 மாநாடு 21ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டில் மோடி கலந்துகொண்டுள்ளார். இதில் பிரான்ஸ் அதிபர் பிரெஸ் இம்மானுவேல் மக்ரோன், இந்தோனேசியாவின் அதிபர் ஜோக்கோ விடோடோ, ஜப்பான் அதிபர் ஃபுமியோ கிஷிடா, தென் கொரியாவின் அதிபர் யூன் சுக் இயோல், வியட்நாம் பிரதமர் ஃபம் மின் சின் ஆகியோரை சந்தித்து பேசினார்.
மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இருவரை பிரதமர் மோடி கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார்.
மேலும் ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர், ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும் ஹிரோஷிமாவில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்று, அங்கு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்.
”காந்தியின் நினைவிடம் உலகிற்கு முக்கியமான செய்தியை சொல்கிறது. அவரின் அகிம்சை, சமாதானம் மறும் ஒற்றுமை உலகத்தில் உள்ள பல கோடி மக்களுக்கு நம்பிக்கை மற்றும் உறுதியை கொடுக்குகிறது” என்று அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil