”ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தியடையட்டும், குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்”: பிரதமர் மோடி இரங்கல்

“ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தியடையட்டும்.”, என பிரதமர் நரேந்திரமோடி தன் ட்விட்டர் பக்கத்தில், நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தியடையட்டும்.”, என பிரதமர் நரேந்திரமோடி தன் ட்விட்டர் பக்கத்தில், நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி, தன் கணவர் போனி கபூரின் அண்ணன் மகன் திருமணத்திற்காக கடந்த இரு நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் துபாய் சென்றார். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அப்போது, கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோர் உடனிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை போனி கபூரின் சகோதரர் சஞ்சய் கபூர் உறுதிப்படுத்தினார். அந்த திருமணத்தில் ஸ்ரீதேவியின் கடைசி மகிழ்ச்சி தருணங்களின் வீடியோவும் இணையத்தில் வெளியானது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி நடித்த கடைசி திரைப்படம் ‘மாம்’.

அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள், தமிழ் திரையுலகினர் என இந்திய திரையுலகமே துயரம் தெரிவித்து வருகிறது. நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்ரீதேவியின் இறப்புக்கு அஞ்சலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தால் வருத்தமுற்றேன். பல்வேறு விதமான கதாபாத்திரங்கள், நினைவில் நிற்கும் நடிப்பின் மூலம் திரைத்துறையில் நிலைத்தவர் அவர். அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள், அவர்களுடன் நானும் இந்த துக்கத்தில் பங்கெடுக்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்”, என தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm narendra modi condolences for sridevis death

Next Story
#RIPSridevi பட்டாசு பூமி டூ பாலிவுட்… ஸ்ரீதேவியின் வாழ்க்கைப் பயணம்Sridevi Native Sivakasi, Crackers Area, Bollywood
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com