PM Modi bids farewell to Rajya Sabha Chairman Venkaiah Naidu: Top quotes: ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு விடைபெறும் நிகழ்வில் மாநிலங்களவையில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை அதிகரித்து, தாய்மொழி பயன்பாட்டை ஊக்குவித்ததற்காக பதவி விலகும் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடுவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
உறுப்பினர்களிடம் விடைபெற்றுக் கொள்ளுகையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் சிறு வயதிலேயே தனது தாயை இழந்த காலத்தை விவரித்தபோது வெங்கையா நாயுடு உணர்ச்சிவசப்பட்டார். ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எங்கள் இருவரின் சித்தாந்தங்கள் வேறுபட்டாலும், அழுத்தத்தின் கீழும் வெங்கையா நாயுடு தனது பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளார் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: சட்டவிரோத ‘நில வியாபாரி’ பட்டியலில் அயோத்தி எம்எல்ஏ பெயர்!
ராஜ்யசபாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய மேற்கோள்கள் இங்கே:
நீங்கள் (வெங்கையா நாயுடு) அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், ஆனால் பொது வாழ்வில் சோர்வடையவில்லை என்றும் எப்பொழுதும் கூறி வருகிறீர்கள்… உங்கள் பதவிக்காலம் முடிவடையும், ஆனால் உங்கள் அனுபவங்கள் தேசத்தை இன்னும் பல ஆண்டுகளாக வழிநடத்தும்.
வெங்கையா நாயுடுவைப் பற்றிய போற்றுதலுக்குரிய விஷயங்களில் ஒன்று, இந்திய மொழிகள் மீது அவருக்கு இருந்த நாட்டம். அவர் சபைக்கு தலைமை தாங்கிய விதத்தில் இது பிரதிபலித்தது. தாய்மொழி பற்றிய விவாதத்தை நீங்கள் (வெங்கையா நாயுடு) சுவாரஸ்யமாக எடுத்துள்ளீர்கள். தாய்மொழி கண்களைப் போன்றது என்றும், இரண்டாவது மொழி ஒரு ஜோடி கண்ணாடி போன்றது என்றும் நீங்கள் எப்போதும் கூறுகிறீர்கள். சபையில் உறுப்பினர்கள் எந்த மொழியிலும் பேச முடியும் என்பதை நீங்கள் உறுதி செய்துள்ளீர்கள்.
உங்கள் தலைமையில், ராஜ்யசபாவின் செயல்திறன் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. எம்.பி.க்களின் வருகையும் அதிகரித்துள்ளது. 177 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன அல்லது விவாதிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவையின் மேல்நோக்கிய பயணத்தில் நினைவில் நிற்கும் பல முடிவுகளை நீங்கள் எடுத்துள்ளீர்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல், சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, சபையை அவமதிக்கும் செயலாகும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். உங்கள் கொள்கைகளில் ஜனநாயகத்தின் உணர்வை நான் காண்கிறேன்… நீங்கள் சபையை உரையாடல், தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் நடத்துவது மட்டுமல்லாமல், அதை பயனுள்ளதாக்கியுள்ளீர்கள். எம்.பி.க்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போதெல்லாம், ‘அரசாங்கம் முன்மொழியட்டும், எதிர்கட்சிகள் எதிர்க்கட்டும், சபை அதை ஏற்று நிறைவேற்றட்டும்,’ என்று கூறுவீர்கள்.
நாட்டின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், சபாநாயகர் மற்றும் பிரதமர் ஆகிய அனைவரும் சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் மற்றும் அவர்கள் அனைவரும் மிகவும் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள், இத்தகைய சூழலில் சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன்.
உங்கள் ஒன்-லைனர்கள் புத்திசாலித்தனமானது மற்றும் வெற்றிப் பெறக்கூடியது. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கப்படுகிறது, விரும்பப்படுகிறது, மதிக்கப்படுகிறது மற்றும் ஒருபோதும் எதிர்க்கப்படவில்லை. வெங்கையா நாயுடு சொல்வதில் ஆழமும் பொருளும் இருக்கிறது.
தனிப்பட்ட முறையில், வெவ்வேறு பதவிகளில் உங்களை நான் நெருக்கமாகப் பார்த்தது எனது அதிர்ஷ்டம். உங்களுடன் சில பதவிகளில் பணியாற்றும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அவை கட்சிக்காரராக உங்களது கருத்தியல் அர்ப்பணிப்பாகவோ, எம்.எல்.ஏ.வாக உங்கள் பணியாகவோ அல்லது எம்.பி.யாக உங்கள் செயல்பாடுகளாகவோ இருக்கலாம்.
கூடுதல் தகவல்கள்: செய்தி நிறுவனங்கள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil