ஒரு காலத்தில் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த பாஜக, சிவசேனா கட்சிகள், தற்போது எதிரும் புதிருமாக உள்ளனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி சிவசேனா தலைவர்களுடனான தனிப்பட்ட உறவை முறித்துகொள்ளும் எண்ணத்தில் இல்லை என கூறப்படுகிறது.
டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முடிந்ததைதொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா அறையில் நடந்த நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவசேனா எம்.பி விநாயக் ராவத்திடம், உத்தவ் தாக்கரேயின் உடல்நிலம் குறித்து பிரதமர் மோடி கேட்டார். அப்போது அவர் பிரதமரிடம், உத்தவ் தாக்கரேவுக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை, தற்போதைய உடல்நிலை குறித்து விளக்கமாக கூறினார்.
அதிகரிக்கும் பிளவு
புதன்கிழமை நிறைவடைந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான விரிசல் அதிகரித்தது போல் தெரியவந்துள்ளது. லோக்சபா ஒத்திவைக்கப்பட்டதும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்கு வாழ்த்து தெரிவிக்க வேகமாக நடந்து சென்றார்.
கூட்டத்தொடரின் முடிவில் அவையை நடத்தியதற்காக சபாநாயகருக்கு, அவைத் தலைவர்களால் நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அவரது அமைச்சர்கள் அறைக்கு வரும் வரை சோனியா காத்திருக்கவில்லை. நாடாளுமன்ற அவையில் சபாநாயகர் இருப்பிடத்திற்கு அப்பால் சென்று எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அரசின் மூத்த அமைச்சர்கள் வாழ்த்து கூறுவது வழக்கும். இம்முறை இது நிகழவில்லை
காத்திருப்பு
புதிய நியமனங்கள் நிலுவையில் இருப்பதால், பல உயர் கல்வி நிறுவனங்கள் முழுநேர தலைவர்கள் இல்லாமல் செயல்படுகிறது. நியமனங்கள் விரைவாக செய்யப்பட்டாலும், பொறுப்பை ஏற்பதற்கு கால தாமதம் ஆகுகிறது.
முதலாவது, காஷ்மீரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட ஐஐஐடி ஜபல்பூர் இயக்குனர் சஞ்சீவ் ஜெயின் பொறுப்பேற்க மூன்ற மாத காலம் தாமதமாகியுள்ளது. அதே போல், நவம்பர் 13 அன்று, ஐஐடி காந்திநகர் இயக்குனர் பேராசிரியர் சுதிர் கே ஜெயின், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் இன்னும் பதவியேற்கவில்லை.
பேராசிரியர் ஜெயின் காந்திநகரை விட்டுச் புறப்படுவதற்கு முன்பு, இங்கிருந்த வேலைகளை முடித்துக்கொண்டிருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தாமதம், உள்ளூர் NSUI பிரிவினர் சமீபத்தில் “காணவில்லை” என்று போலீசில் புகார் செய்ய வழிவகுத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil