கோவிட்-19 வேகமாக பரவி வருகிறது, அதன் அச்சுறுத்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்று பிரதமர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ’மான் கி பாத்’தில் உரையாற்றிய பிரதமர் மோடி, அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறினார். முகமூடி அணிவதில் ஒருவர் சோர்வாக இருக்கும்போது, அவர்கள் கோவிட்-19 போர்வீரர்கள் மற்றும் அவர்களின் முன்மாதிரியான முயற்சிகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
“இன்று, நம் நாட்டில் கோவிட்-19இல் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் மற்ற நாடுகளைவிட சிறப்பாக உள்ளது. நம்முடைய கொரோனா இறப்பு விகிதம் மற்ற நாடுகளை விட மிகக் குறைவு. லட்சக்கணக்கான மக்களின் உயிரை நாம் காப்பாற்ற முடிந்தது. ஆனால், கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை. அது பல பகுதிகளில் வேகமாக பரவுகிறது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
லடாக் மற்றும் கட்ச் பற்றிப் பேசிய பிரதமர் மோடி, இரு பிராந்தியங்களும் அதன் பரவலைக் கட்டுப்படுத்த புதிய முறைகளைப் பயன்படுத்தியதைப் பாராட்டினார்.
“கோவிட்-19 க்கு எதிராக கிராமங்கள் அசாதாரண முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நிர்வாக மற்றும் புதுமையான முயற்சிகள் குறித்து தெரிவித்தார். “ஒரு நேர்மறையான அணுகுமுறையுடன், ஒரு பேரழிவை வாய்ப்பாக மாற்ற முடியும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
கோவிட்-19 தொற்றுநோயின்போது உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்க பீகார், ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா முழுவதும் வெள்ளம் மற்றும் அதிக மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரதமர் மோடி நம்பிக்கையைத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய, மாநில அரசுகள், உள்ளூர் நிர்வாகங்கள், என்.டி.ஆர்.எஃப் மற்றும் சமூக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்று கூறினார்.
கார்கில் விஜய் திவாஸுடன் இணைந்த நாள் குறித்து பிரதமர் மோடி 1999ம் ஆண்டு கார்கில் போரின் போது இந்திய ஆயுதப்படைகளின் வீரம் குறித்து நினைவு கூர்ந்தார். “21 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில், நம்முடைய ராணுவம் கார்கில் போரில் வென்றது. இந்தியா பின்னர், பாகிஸ்தானுடன் நல்லுறவைக் கொண்டிருக்க முயன்றது. ஆனால்ம் எந்த காரணமும் இல்லாமல் எல்லோரிடமும் பகை வைத்திருப்பது துன்மார்க்கரின் இயல்பு என்று கூறப்படுகிறது” என்று பிரதமர் மோடி கூறினார்.
மகாத்மா காந்தியின் எண்ணங்களை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 1999ம் ஆண்டு செங்கோட்டை உரையையும் அவர் நினைவு கூர்ந்தார். ஞாயிற்றுக்கிழமை கார்கில் போர் வெற்றியின் 21 வது ஆண்டு விழாவை நாடு அனுசரிக்கிறது.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி வரும் ராக்ஷாபந்தன் பற்றி பேசிய பிரதமர் மோடி, உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பதற்கான வாய்ப்பாக இருப்பதால் மக்கள் vocal and local உடன் இணைக்கிறார்கள் என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"