Advertisment

மன் கி பாத்: போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க முயற்சி; ஹெல்ப்லைன் அறிவித்த மோடி

பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு, ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) இரண்டாவது எபிசோடில் பேசினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PM Modi xyz

மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு, அவர் பேசும் மன் கி பாத் நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடு இது.

பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு, ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) இரண்டாவது எபிசோடில் பேசினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Mann Ki Baat: PM Modi announces national narcotics helpline in bid to ‘make India drugs-free’; hails Moidams World Heritage Site status

பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர வானொலி உரையான 'மன் கி பாத்' -ன் 112வது எபிசோடில் ஞாயிற்றுக்கிழமை காலை 10:55 மணிக்கு பேசினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு, அவர் பேசும் மன் கி பாத் நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோடு இது. இந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி,  “அடங்காத தைரியம் மற்றும் துணிச்சலின் சின்னமான அஹோம் போர்வீரன் லச்சித் போர்புகானின் மிக உயரமான சிலையை திறக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது” என்று அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது மாதாந்திர வானொலி உரையான ‘மன் கி பாத்’ 112-வது எபிசோடில் உரையாற்றினார். அப்போது அவர், “போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் தேசிய போதைப்பொருள் ஹெல்ப்லைன் ‘மனாஸ்’ தொடங்குவதாக அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “போதைப்பொருள் அச்சுறுத்தலின் சவால் குறித்து உங்களுடன் அடிக்கடி விவாதித்தேன். ஒவ்வொரு குடும்பமும் தங்கள் குழந்தை போதைப்பொருளின் பிடியில் சிக்கக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். இப்போது அத்தகையவர்களுக்கு உதவ, அரசாங்கம் மானஸ் என்ற சிறப்பு மையத்தைத் திறந்துள்ளது.” என்று அறிவித்தார்.

அஸ்ஸாமின் மொய்டாம்ஸ், அஹோம் அரச குடும்பத்தின் புதைகுழிகள், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தள பட்டியலில் சேர்க்கப்பட்டதைக் கொண்டாடிய அவர்,  “ஒரு நாடு தனது சொந்த கலாச்சாரத்தில் பெருமை கொள்வதன் மூலம் மட்டுமே முன்னேற முடியும்” என்று கூறி, அந்த தளத்தை தங்கள் பயண பட்டியலில் சேர்க்குமாறு மக்களை வலியுறுத்தினார்.

மேலும், “இந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி, அடங்காத தைரியம் மற்றும் துணிச்சலின் சின்னமான அஹோம் போர்வீரன் லச்சித் போர்புகானின் மிக உயரமான சிலையை திறக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என்பதை நான் நினைவில் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.

64-வது சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் நான்காவது இடத்தைப் பிடித்த பங்கேற்பாளர்களை நிகழ்ச்சியில் பேசவும், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். பிரதமர் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

பாரிஸ் ஒலிம்பிக்கின் பின்னணியில், சர்வதேச அரங்கில் இந்தியர்கள் போட்டியிடும் போது அவர்களை உற்சாகப்படுத்துமாறு மோடி மக்களை வலியுறுத்தினார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் மன் கி பாத் நிகழ்ச்சியில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (இ.சி.ஐ) வாழ்த்து தெரிவித்த மோடி, தேர்தலை சுமூகமாக நடத்தியதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“இன்று, நமது அரசியலமைப்பு மற்றும் நாட்டின் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் உலகிலேயே மிகப்பெரிய தேர்தல். 65 கோடி மக்கள் வாக்களித்த இவ்வளவு பெரிய தேர்தல் உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்ததில்லை.” என்று பிரதமர் மோடி கூறினார்.

ஆளும் கட்சிக்கு விளம்பரம் அளிக்கும் வகையில் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளையோ அல்லது பொது நிதியுதவி பெறும் மேடைகளையோ அல்லது தேர்தல் ஆதாயத்திற்கோ பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், ஜூன் மாதம் வரை 'மன் கி பாத்' நிகழ்ச்சி விடுபட்டு இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment