வரும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை பலமான எண்ணிக்கையுடன்" மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் தனது உறுதியை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார். மேலும், இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு கட்சித் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Next 5 years crucial, BJP will work towards ‘Viksit Bharat’: PM Modi
“அடுத்த ஐந்து ஆண்டுகள் முக்கியமானதாக இருக்கும். ‘விக்சித் பாரத்’ நோக்கி நாம் ஒரு பெரிய பாய்ச்சலை மேற்கொள்ள வேண்டும். வலுவான எண்ணிக்கையில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்வதே முதலில் இன்றியமையாதது” என்று புதுடெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க தேசிய மாநாட்டில், அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதிசெய்ய, புதிய வாக்காளர்களைச் சென்றடையவும், அவர்களின் நம்பிக்கையைப் பெறவும், அடுத்த 100 நாட்களுக்கு புத்துணர்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் செயல்படுமாறு பா.ஜ.க தொண்டர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுககொண்டார். இருப்பினும், தாம் அதிகாரத்தை அனுபவிப்பதற்காக மூன்றாவது முறையாக பதவியேற்கவில்லை என்றும், தேசத்திற்காக உழைக்க விரும்புவதாகவும் மோடி கூறினார். நான், எனது வீட்டைப் பற்றி நினைத்திருந்தால் கோகோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகள் கட்டித் தந்திருக்க முடியாது.” என்று மோடி கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளில் தனது ஆட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பெண்கள் நலனுக்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார். செங்கோட்டையில் இருந்து பெண்களின் கண்ணியம் குறித்து பேசிய முதல் பிரதமர், கழிவறை பிரச்சினையை எழுப்பியவர் என்று பிரதமர் மோடி கூறினார்.
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் சக்தியை ஒருங்கிணைத்து ‘விக்சித் பாரத்’ அமைப்பதில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது என்று மோடி பேசினார். “யாராலும் அங்கீகரிக்கப் படாதவர்களிடம் நாம் கேட்டோம், அது மட்டுமல்ல, நாம் அவர்களை வணங்குகிறோம்” என்று அவர் கூறினார். “வரும் காலங்களில், நம் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
மிஷன் சக்தி நாட்டில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பதற்கான ஒரு முழுமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும், 15,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ட்ரோன்கள் கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
“இப்போது, ‘ட்ரோன் தீதி’ (ட்ரோன் சகோதரி) விவசாயத்தில் அறிவியல் தன்மையையும் நவீனத்தையும் கொண்டு வரும். இப்போது, நாட்டில் உள்ள 3 கோடி பெண்கள் ‘லட்சாதிபதி தீதிகள்’ ஆக்கப்படுவார்கள்,” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கோடிக்கணக்கான பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் கனவுகளே மோடியின் கனவு என்று பிரதமர் மோடி கூறினார்.
“நாம் பெரும் ஊழல்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து நாட்டை விடுவித்து, ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டோம்” என்று பிரதமர் மோடி கூறினார். மேலும், “தனது 10 ஆண்டு கறையற்ற நிர்வாகத்தில் 25 கோடி மக்களை தனது அரசாங்கம் வறுமையிலிருந்து மீட்டுள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.
“நான் தன் மகிழ்ச்சிக்காக வாழ்பவன் அல்ல. நான் பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும் என வாதிடுவது அரசியல் ஆதாயங்களுக்காக அல்ல, இந்தியாவின் நலனுக்காக. எனது முயற்சிகள் இந்திய மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்தியர்களின் கனவுகள் எனது கடமைகள்” என்று பிரதமர் மோடி கூறினார்.
அயோத்தியில் புதிதாகத் திறக்கப்பட்ட ராமர் கோயிலை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “ஐந்து நூற்றாண்டுகள் மக்களின் காத்திருப்பை, கோயிலைக் கட்டுவதன் மூலம் பா.ஜ.க முடிவுக்கு வந்தது” என்று கூறினார்.
“குஜராத் மாநிலம் பாவகாத் நகரில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு மதக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் கர்தார்பூர் சாஹிப் நெடுஞ்சாலையைத் திறந்தோம். 70 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, 370-வது பிரிவிலிருந்து நாடு சுதந்திரம் பெற்றுள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.