இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு – அமெரிக்க நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு

PM Modi said golden opportunity for investment in India: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அமெரிக்க நிறுவனங்களிடம் பேசுகையில், அளவுடன் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால், அவர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று கூறினார்

Tamilnadu News Today Live Updates

PM Modi said golden opportunity for investment in India: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை அமெரிக்க நிறுவனங்களிடம் பேசுகையில், அளவுடன் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால், அவர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று கூறினார். கார்ப்பரேட் வரி குறைப்பு குறித்த தனது அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை முதலீடுகளை வரவேற்பது மற்றும் வணிக சூழ்நிலையை மேம்படுத்துதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

அமேரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ப்ளூம்பெர்க் குளோபல் பிசினஸ் மன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் அளவுடன் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்… நீங்கள் ஒரு பெரிய சந்தையுடன் ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்… உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வாருங்கள்.”என்று அவர் உலகளாவிய நிறுவனங்களிடம் கூறினார். மேலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் நாடு பெரிய அளவில் முதலீடு செய்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில் அரசாங்கம் பயனுள்ள வகையில் கார்ப்பரேட் வரிவிகிதத்தை 35 சதவீதத்திலிருந்து 25.17 சதவீதமாக குறைத்தது. உலக பொருளாதாரத்தில் இது வரிவிதிப்பு தொடர்பாக இந்தியாவை முன்னணிக்கு கொண்டுவந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 டிரில்லியன் பொருளாதாரத்திற்கு அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கும் அவர், ஜனநாயகம், அரசியல் ஸ்திரத்தன்மை, யூகிக்கக்கூடிய கொள்கை மற்றும் சுயாதீன நீதித்துறை முதலீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்றார்.

மேலும், அவர் இந்தியா வரி சீர்திருத்தங்களைத் தொடரும் என்று கூறினார். அந்நிய நேரடி முதலீட்டில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 286 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இது முந்தைய 20 ஆண்டுகளில் கிடைத்ததில் பாதி என்று தெரிவித்தார்.

இந்தியா தனது பாதுகாப்புத் துறையை முன்பைப் போல இல்லாமல் திறந்து விட்டதாகவும் மோடி பாதுகாப்புத் துறையில் முதலீடுகளைத் கோரினார் என்றும் வணிக உணர்வை மேம்படுத்துவதற்காக, மோடி அரசாங்கம் தனது இரண்டாவது ஆட்சியில் 50 வணிகங்களை ரத்து செய்துள்ளார் என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm narendra modi speech at bloomberg global business forum in us

Next Story
பரபரப்பு திருப்பம்; ஒத்துக் கொண்ட டிடிவி தினகரன்….அடுத்து என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com