Advertisment

ஓவர்நைட்டில் ஃபேமஸான தாயம்மா; மோடி பாராட்டியது ஏன்?

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ‘இளநீர் விற்கும் தாயம்மாளுக்கு மிகப்பெரிய மனது’ என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இளநீர் விற்கும் பெண்ணுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
PM Narendra Modi tributes as great heart to tender coconut seller woman, tender coconut seller woman of tamilnadu, udumalaipet Tirupur, Thayamma tender coconut seller, இளநீர் விற்கும் தாயம்மா, தாயம்மாவுக்கு மிகப்பெரிய மனது, பிரதமர் புகழாரம் சூட்டிய தாயம்மா, Thayamma, tender coconut seller Thayamma, PM Modi pricing tamilnadu woman

பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் ‘இளநீர் விற்கும் தாயம்மாளுக்கு மிகப்பெரிய மனது’ என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த இளநீர் விற்கும் பெண்ணுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதனால், பிரதமர் மோடி பாராட்டிய தாயம்மா யார் என்று வியப்புடன் விவாதித்து வருகின்றனர்.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் ‘மான் கி பாத்’ என்ற ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த ஆண்டி முதல் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஜனவரி 30) காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பேசியதாவது: “இன்று வணக்கத்துக்குரிய அண்ணல் காந்தியடிகள் மறைந்த நாள். ஜனவரி 30ம் தேதி காந்தியடிகள் அளித்த கற்பித்தலை நினைவில் கொள்ளவைக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் நாம் குடியரசு தின விழாவைக் கொண்டாடினோம். ராஜ்பாத்தில் நமது வீரர்களின் அணிவகுப்பை பார்த்தோம். இந்தியா கேட்டில் நேதாஜியின் டிஜிட்டல் உருவம் நிறுவப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் நாட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்று மக்கள் சந்தோஷப்பட்டனர்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாள் அவர்களின் எடுத்துக்காட்டு மிகவும் கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. தாயம்மாள் அவர்களிடத்தில் அவருக்கென எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக இவருடைய குடும்பம் இளநீர் விற்று வாழ்க்கை நடத்தி வந்தது. பொருளாதார நிலை சரியாக இல்லாத நிலையிலும் தாயம்மாள் தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. இவருடைய பிள்ளைகள் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலை பள்ளியில் படித்து வந்தார்கள். இந்நிலையில் பள்ளியில் நடந்த ஒரு கூட்டத்தில் வகுப்புகள் மற்றும் பள்ளியின் நிலையை சீர் செய்ய வேண்டும், பள்ளியின் கட்டமைப்பை சீர் செய்ய வேண்டும் என்ற விஷயம் விவாதிக்கப்பட்டது. தாயம்மாள் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற விவாதம், அனைத்தும் பணத்தட்டுப்பாடு என்ற நிலையில் தடைபட்டுப் போனது. அதன்பிறகு தாயம்மாள், செய்த விஷயத்தை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. இளநீர் விற்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்த தாயம்மாள், தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த ரூ.1 லட்சம் ரூபாயை பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார். உண்மையிலேயே இப்படி செய்ய மிகப்பெரிய மனது வேண்டும்” என்று கூறி தாயம்மாளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இதையடுத்து, இளநீர் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தாலும், தனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தை மேம்படுத்துவதற்காக தனது சேமிப்பு தொகை 1 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்து பலரின் கவனத்தைப் பெற்றார். தற்போது பிரதமர் மோடியும் புகழ்ந்து பாராட்டி பேசியிருப்பதன் மூலம் தாயம்மா கவனம் பெற்றுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pm Modi Maan Ki Baat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment