PM Modi : ஊரடங்கை தளர்த்துவது குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.
தமிழக போலீஸ் ஆன்லைன் ஓவியப் போட்டி: மாவட்டம் தோறும் 20 பேருக்கு பரிசு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் தருணத்தில் இந்தியா, கடந்த 1 மாதத்துக்கும் மேலாக லாக் டவுனில் உள்ளது. ஆரம்பத்தில் மார்ச் 20-ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் 24-ம் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், ஏப்ரல் 14-ந்தேதி வரை நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
அதன் பிறகு 3 முறை மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. கடைசியாக கடந்த 11-ம் தேதி முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக 14-ம் தேதி அறிவித்தார்.
இதற்கிடையே நாடு முழுவதும் முடக்கத்தில் இருப்பதால், அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 3-ம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கை நீட்டிப்பதாக சில மாநிலங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில் இன்று முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார் மோடி.
நோய் எதிர்ப்பு அணுக்கள் மதங்களை பார்ப்பதில்லை – அரவிந்த் கெஜ்ரிவால்
அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், நோய்த்தொற்றின் தாக்கம், பாதிப்புகள் ஆகியவை பற்றியும், ஊரடங்கை எப்படி விலக்குவது? கட்டுப்பாடுகளை எப்படி தளர்த்துவது? ஊரடங்கு காலத்துக்கு பின்னரும் என்னென்ன கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது? பொருளாதார நடவடிக்கைகளை எப்படி ஊக்குவிப்பது? போன்ற முக்கிய விஷயங்கள் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்வு கொடுக்கலாமா என்பது பற்றி மே 3-க்கு பின் அறிவிக்கப்படும் என பிரதமர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கவும், பாதிப்பு அல்லாத பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு கொரோனா பாதிக்கப்படாத இடங்களில் தொழில்களை தொடங்க அனுமதிக்கவும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பச்சை மண்டலங்களில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்தினாலும், சிவப்பு மண்டலங்களில் அது தொடரும் என யூகிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.