பொது முடக்கம் நீடிப்பு: காலை 10 மணிக்கு மோடி உரை

பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் பதிவில் `பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (2020 ஏப்ரல் 14) காலை பத்து மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By: Updated: April 14, 2020, 07:17:09 AM

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் இதுவரை உலக அளைவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோன பரவலைத் தடுக்க இந்தியாவில், மத்திய மாநில அரசுகள் திவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,152 ஆக உயர்ந்துள்ளது. 308 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிரதமர் மோடி, கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் ஊடகங்கள் வழியாக உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பஞ்சாப், ஒடிஷா, தெலங்கானா, ஆகிய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்துள்ளன. அதே போல, தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால், பிரதமர் மோடி நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Pm narendra modi will address on april 14 morining 10 am about lock down extend

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X