பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சேனல், 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலக நாடுகளின் தலைவர்களில் யூடியூப் தளத்தில் அதிக சப்ஸ்கிரைபர்களை பெற்ற தலைவராக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
2007 அக்டோபர் மாதம் குஜராத்தின் முதல்வராக மோடி இருந்த போது, யூடியூர் சேனல் தொடங்கப்பட்டது.
நடிகர் அக்ஷய் குமார் உடனான நேர்காணல், 2019 இல் ஹிந்தி திரைப்படத் துறை உறுப்பினர்களுடன் பிரதமரின் உரையாடல், கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் குறித்த வீடியோக்கள் இந்த சேனலில் பிரபலமானவை ஆகும்.
இந்த சேனலைத் தவிர, யூடியூப்பில் பிரதமரின் அதிகாரப்பூர்வ பிஎம்ஓ இந்தியா சேனலும் உள்ளது. அதில், அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் பிரதமரின் உரை பகிரப்படுகின்றன.
பிரதமர் மோடி மற்ற சமூக வலைதளத் தலங்களிலும் ஆக்டிவாக இருப்பவர். ட்விட்டரில் அவரை 753 லட்சம் பேர் பின்தொடருகின்றனர். பேஸ்புக்கில் 468 லட்சம் மக்கள் போலர்யர்ஸாக உள்ளனர்.
மற்ற இந்திய அரசியல் தலைவர்களில், ராகுல் காந்தி யூடியூப் சேனலுக்கு 5.25 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், சசி தரூர் சேனலுக்கு 4.39 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு 2.12 லட்சம் சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர்.
மோடிக்கு அடுத்ததாக பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ, யூடியூப் தளத்தில் 36 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோருக்கு 30 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், வெள்ளை மாளிகை பக்கத்திற்கு 19 லட்சம் சப்ஸ்கிரைபர்களும், ஜோ பைடனுக்கு 7 லட்சம் சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil