Manoj Dattatrye More : 81வது வயதில் அடியெடுத்து வைக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார் பற்றிய புத்தகமான அஷ்டவ்தானியை (Ashtavdhani) இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் மராத்தி பத்திரிக்கையான லோக்சட்டா வெளியிட்டது. பல்வேறு அரசியல் பிரமுகர்களால் எழுதப்பட்ட கட்டுரை தொகுப்பு இடம் பெற்றுள்ள இந்த புத்தகத்தை பாரத் ஃபோர்ஜ் நிர்வாகி பாபா கல்யாணி புதன் கிழமை அன்று வெளியிட்டார். புத்தக வெளியீடு முடிந்த பிறகு லோக்சட்டாவின் ஆசிரியர் கிரிஷ் குபேரிடம் தன்னுடைய 50 ஆண்டு கால அரசியல் மற்றும் பொதுவாழ்க்கைப் பற்றி உரையாடினார் சரத் பவார்.
2019ம் ஆண்டு தேர்தல் குறித்தும், அதன் முடிவுகள், பாஜக, காங்கிரஸ், சிவசேனா கட்சிகளுடனான கூட்டணி பேச்சு வார்த்தை குறித்தும், அதன் பின்னால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் குறித்தும் சுவாரசியமான பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஷரத் பவார் பேசியது என்ன? முழுமையாக கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்
2019ம் ஆண்டு பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி வைத்து தேர்தலில் களம் இறங்கினார்கள். அதே நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி காங்கிரஸுடன் களம் இறங்கியது. தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெற்ற போதிலும் முதல் அமைச்சர் பதவி காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணி முறிந்தது.
பாஜக குறித்து பேசிய ஷரத் பவார், 2019ம் ஆண்டு தேர்தலின் போது பாஜக என்.சி.பி. கட்சியுடன் கூட்டணி வைக்க அதிக ஆர்வம் காட்டியது. ஆனால் அப்படியான ஒரு கூட்டணியை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இருக்கட்சிகளுக்கும் மத்தியில் இருந்தது உண்மை தான். பிரதமர் இது குறித்து இரு கட்சிகளும் யோசிக்க வேண்டும் என்று கூறினார். ஆனாலும், நான் அவருடைய அலுவலகத்திலேயே இது சாத்தியமில்லை என்று கூறிவிட்டு வந்தேன்” என்று கூறினார் பவார்.
தேர்தல் காலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மத்தியில் முரண்பாடுகள் இருந்ததை காரணமாக கொண்டு கூட அவர்கள் கூட்டணிக்கு அணுகியிருக்கலாம் என்று கூறிய ஷரத் பவார், மறைந்த பாலாசாஹெப் தாக்கரே என்னுடைய நண்பன் என்பதால் நாங்கள் சிவசேனாவை ஆதரித்தோம் என்று கூறினார்.
சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஒருபுறம் உறுதியாக, பவாரின் அண்ணன் மகன் அஜீத் பவாரை பாஜகவுடன் கூட்டணி வைக்க நீங்கள் தான் அனுப்புனீர்களா என்று கேட்டதற்கு, ஒரு வேலை நான் அஜீத்தை அனுப்பியிருந்தால், அந்த வேலையை அரைகுறையாக செய்யாமல் முழுமையாக செய்திருப்பேன்” என்று கூறினார்.
பாஜக அஜீத் பவாருடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்தது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும் அஜித் பவார் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டனர். ஆனால் அந்த மகிழ்ச்சி பாஜகவிற்கு சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil