பாரதிய ஜனதா வெற்றிக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களை பாரதிய ஜனதா கட்சி தக்கவைத்துள்ள நிலையில், வெற்றி கொண்டாட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு சென்றார்.
Advertisment
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொண்டர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜனநாயக அமைப்புகளின் மீது முழு நம்பிக்கை இருப்பதை இன்றைய முடிவுகள் காட்டுகின்றன.
வெற்றிக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி
நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் கட்சியின் சிறப்பாக செயல்பாடுகளால் இந்த முடிவுகள் வந்துள்ளன. இது வடகிழக்கு மாநிலங்கள் டெல்லி, மனதில் இருந்து தூரத்தில் இல்லை என்பதை காட்டுகிறது” என்றார். மேலும் இந்த வெற்றி ஊழியர்களின் சேவை, அர்ப்பணிப்பு, அரசின் பணி காரணமாக சாத்தியமாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/