Doordarshan Chennai official suspended : சென்னையில் பிரதமர் மோடி பேசியதை நேரலையில் ஒளிப்பரப்பாத சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி பிரிவின் உதவிப் பணிப்பாளர் வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
சமீபத்தில் சென்னை ஐஐடியில் நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியிலும் மோடி உரையாற்றினார். மோடியின் இந்த நிகழ்ச்சியை சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி
நேரலை செய்யவில்லை என்று புகார் எழுந்தது.
தூர்தர்ஷனின் தமிழ்த் தொலைக்காட்சியான பொதிகையில் இரண்டு நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட்டன. ஆனால், சென்னை ஐஐடியில் நடந்த 'சிங்கப்பூர் - இந்தியா ஹாக்கத்தான் 2019' நிகழ்ச்சியில் பிரதமர் பேசியது பொதிகையில் நேரலை செய்யப்பட்டவில்லை. வழக்கமான செய்தித் தொகுப்பில் மட்டும் இந்த உரை இடம்பெற்றது.
Advertisment
Advertisements
இதுக் குறித்து பிரதமர் அலுவலகம் தூர்தர்ஷன் தலைமையகத்திடம் விளக்கமும் கேட்டிருந்தது. இந்நிலையில், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சிப்பிரிவு உதவி இயக்குநர் வசுமதி, பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். . பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அதிகாரி சசி ஷேகர் வேம்பதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த பணியிடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசுமதி மீது எடுக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வசுமதி தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், எவ்வளவு நாட்களுக்கு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. வசுமதி தூர்தர்ஷன் தலைமையகத்திலிருந்து வெளியேறக்கூடாது எனவும், முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1965ஆம் ஆண்டின் மத்திய குடிமைப் பணிகள் விதியின் கீழ் அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாக இதுக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.