தெருவோர வியாபாரிகளுக்கான அரசாங்கத்தின் கடன் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 41 சதவீதம் பேர் பெண்களாவர். இதில் வடக்கு மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் மிகவும் சிறப்பாக உள்ளன.
Advertisment
கோவிட்-19 மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட பிரதம மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்ம நிர்பர் நிதி திட்டம் (PM-SVANidhi)- ஜூன் 1ஆம் தேதியுடன் மூன்றாண்டுகளை நிறைவு செய்தது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாட்டில் உள்ள திட்டத்தின் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 36.33 லட்சம். இதில் 21.31 லட்சம் ஆண்கள், 15.02 லட்சம் பெண்கள், "மற்ற" பாலினப் பிரிவின் 219 பயனாளிகளும் அடங்குவர்.
10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கிட்டத்தட்ட அனைத்து தெற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில், பெண்களே பெரும்பான்மையான பயனாளிகளாக உள்ளனர்.
Advertisment
Advertisements
இதில், ஆந்திரா (70 சதவீதம் பெண்கள்), தெலுங்கானா (66 சதவீதம் பெண்கள்), தமிழ்நாடு (64 சதவீதம் பெண்கள்) மற்றும் கர்நாடகா (50 சதவீதம் பெண்கள்) முதலிடங்களில் உள்ளது.
ஆனால் கேரளா ஒரு விதிவிலக்கு, இந்த ஆண்டு ஜூன் மாதம் 25 ஆண்டுகளை நிறைவு செய்த குடும்பஸ்ரீ போன்ற அதன் சொந்த திட்டங்களின் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்த மாநிலம் முன்னோடியாக உள்ளது.
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெண் பயனாளிகள் 5,80,956 பேர் அல்லது நாட்டிலுள்ள மொத்த 15,02,597 பெண் பயனாளிகளில் கிட்டத்தட்ட 39 சதவீதம் பேர் உள்ளனர்.
மணிப்பூர் (94 சதவீதம்), நாகாலாந்து (88 சதவீதம்), மேகாலயா (77 சதவீதம்), அருணாச்சலப் பிரதேசம் (75 சதவீதம்) மற்றும் சிக்கிம் (58 சதவீதம்) ஆகியவை பெண்களின் அதிகமான பங்குடன் தனித்து நிற்கின்றன. அஸ்ஸாமிலும் பெண்களின் பங்கு 47 சதவீதம் என்பது தேசிய சராசரியான 41 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது.
திரிபுரா மட்டும் விதிவிலக்காக குறைந்த 12 சதவீத பெண்களை கொண்டுள்ளது.
வடக்கில், பாஜக ஆட்சி செய்யும் இரண்டு மாநிலங்களில், அதாவது உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம், முறையே 9.60 லட்சம் மற்றும் 5.41 லட்சம் தெருவோர வியாபாரிகளாக அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளைக் கொண்டுள்ளது.
பெண் பயனாளிகள் இரு மாநிலங்களிலும் தலா 32 சதவீதம் என்ற அளவில் சதவீத அடிப்படையில் குறைவாக இருக்கலாம். ஆனால் முழுமையான எண்ணிக்கையில், இது 4.82 லட்சமாக ஆகும்.
ஆர்ஜேடி- ஜேடியு- காங்கிரஸ் ஆளும் பீகாரில், 14,098, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் வெறும் 15,861 பெண் பயனாளிகளும் உள்ளனர்.
ஒரு அமைச்சக அதிகாரி கூறுகையில், பயனாளிகளின் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பதில் பிராந்தியங்களின் சமூக அமைப்பு ஒரு பங்கைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, மேகாலயாவின் தாய்வழி சமூகங்களில் இளைய மகள் சொத்தை வாரிசாகப் பெறுகிறார், மேலும் பெரும்பாலான நிறுவனங்களை பெண்கள் நடத்துகிறார்கள்.
எவ்வாறாயினும், இந்தத் திட்டம் இலக்காகக் கொள்ளப்பட்ட விதம் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்கிறது என்று இந்தியாவின் தெரு வியாபாரிகள் தேசிய சங்கத்தின் (NASVI) தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்பிந்த் சிங் கூறினார். சில மாநிலங்களில், உள்ளூர் அதிகாரிகள், பெண்களின் சுயஉதவி குழுக்களை பயனாளிகளாக அடையாளம் கண்டனர்.
உதாரணமாக, ஆந்திரப் பிரதேசத்தில், அவர்கள் நகராட்சிப் பகுதிகளில் வறுமை ஒழிப்பு பணி (MEPMA) ஏற்கனவே சுயஉதவி குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
சில மாநிலங்களில் ஆண்களை விட பெண் பயனாளிகள் அதிகம் என்பதால் அந்தந்த மாநிலங்களில் தெருவோர வியாபாரிகள் அதிகம் என்று அர்த்தம் இல்லை என்று சிங் கூறினார்.
மேற்கு மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில், தெருவோர வியாபாரிகளின் பயனாளிகள் அதிக அளவில் உள்ளனர்.
இங்கு மொத்த பயனாளிகளில் முறையே 42 சதவீதம் மற்றும் 41 சதவீதம் பெண்கள் ஆவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“