How To Apply PM Ujjwala Yojana Scheme : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நடப்பு 2021-22 ம் ஆண்டு்ககான யூனியன் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பேப்பர் இல்லாத டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் இந்திய வரலாற்றிலேயே, முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்ட டிஜிட்டல் பட்ஜெட்டாகும். ஆறு தூண்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த யூசியன் பட்ஜெட்டில், பல புதிய திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. தனது பட்ஜெட் குறித்து உரை நிகழ்ச்சதிய நிர்மலா சீதாராமன், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு கூடுதலாக 1 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
பிரதான் மந்திரி உஜ்வால யோஜனா என்றால் என்ன?
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா கடந்த 2016-ம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் தொடங்கப்பட்ட சமூக நலத் திட்டமாகும். உத்தரபிரதேசத்தின் பல்லியாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் ஏழை குடும்பங்களுக்கு எல்பிஜி (கேஸ்) இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்படும் அசுத்தமான சமையல் எரிபொருட்களை தவிர்த்து சுத்தமான மற்றும் ஆற்றல் மிகுந்த எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) பயன்படுத்த செய்வதே இதன் நோக்கமாகக் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பிபிஎல் (வறுமைக் கோட்டுக்குக் கீழே) வீடுகளில் பெண்களின் பெயரில் 5 கோடி எல்பிஜி இணைப்புகளை விநியோகிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. திட்டத்தின் சில நோக்கங்கள்
இந்த திட்டத்தில் பயன்பெற வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் தகுதிகள் :
விண்ணப்பதாரர் இந்தியாவில் நிரந்தர வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் 18 வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பிபிஎல் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வீட்டில் ஏற்கனவே யாருடைய பெயரிலும் எல்பிஜி இணைப்பை வைத்திருக்கக்கூடாது. பிபிஎல் குடும்பத்தின் மாதாந்திர வீட்டு வருமானம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் வரையறுக்கப்பட்டபடி ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் தரவு எஸ்.சி.சி -2011 (கிராமப்புற) தகவல்களின்படி எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுடன் பிபிஎல் தகவல்களை பொருந்த வேண்டும். விண்ணப்பதாரர் வேறு எந்த அரசாங்க திட்டத்திலும் இதே போன்ற நன்மைகளைப் பெற்றிருக்கக்கூடாது.
பிரதான் மந்திரி உஜ்வால யோஜனாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பிபிஎல் குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான பெண்கள் உஜ்வாலா யோஜனா விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 2 பக்க விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை படிவத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய பெயர், தொடர்பு விவரங்கள், ஜன தன் / வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை எண் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சிலிண்டர் வகை அதாவது 14.2KG அல்லது 5KG இன் தேவையையும் குறிப்பிட வேண்டும். உஜ்வாலா யோஜனகனுக்கான KYC விண்ணப்ப படிவங்களும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள எல்பிஜி விற்பனை நிலையத்தில் சமர்பிக்கப்பட வேண்டும்.
பிரதமர் உஜ்வாலா யோஜனாவுக்கு தகுதி
எஸ்.சி.சி -2011 தகவலின்படி அடிப்படையில் தகுதியான பிபிஎல் குடும்பங்களை அடையாளம் காண்பது. இருப்பினும் திட்டத்தின் அடிப்படை தகுதி அளவுகோல்கள் கீழே உள்ளன.
இந்தியாவில் எல்பிஜி விநியோகத்தின் தற்போதைய நிலை
இந்தியாவில் 24 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன, அவற்றில் சுமார் 10 கோடி குடும்பங்கள் எல்.பி.ஜி யை சமையல் எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விறகு, நிலக்கரி, சாணம் போன்றவற்றை சமைப்பதற்கான முதன்மை பெருளாக பயன்படுத்தி வருகின்றனர்.