ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கடந்த 2018ல் தொடங்கப்பட்டது தான் ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இந்நிலையில், இந்தியக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தலைமை கணக்குத் தணிக்கையாளரான சி.ஏ.ஜி (CAG) இந்தத் திட்டத்தின் தணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு முன் சிகிச்சை பெற்ற 3,446 நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக ரூ.6.97 கோடி செலுத்தப்பட்டதாகவும், ஆனால், அவர்கள் தரவுத்தளத்தில் உள்ள தகவலின்படி ஏற்கனவே இறந்ததாக அறிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 3,446 நோயாளிகள் தொடர்பான 3,903 மனுக்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு ரூ.6.97 கோடி செலுத்தப்பட்டதாகவும் சி.ஏ.ஜி குறிப்பிட்டுள்ளது. மேலும், "முந்தைய கோரிக்கை/சிகிச்சையின் போது 'இறந்ததாக' காட்டப்படும் பயனாளியின் சிகிச்சை" என்ற தலைப்பின் கீழ், "டி.எம்.எஸ்-ல் (திட்டத்தின் பரிவர்த்தனை மேலாண்மை அமைப்பு) ஏற்கனவே 'இறந்தது விட்டதாக' காட்டப்பட்ட நோயாளிகளின் பெயரில், அவர்களுக்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பணம் பெறப்பட்டுள்ளது.
இதே பாணியில், கேரளாவில் இருந்து பெறப்பட்ட 966 மனுக்களின் “சிகிச்சைக்கு” மொத்தம் ரூ.2,60,09,723 வழங்கப்பட்டுள்ளது.. மத்தியப் பிரதேசத்தில் இதுபோன்ற 403 இறந்த நோயாளிகளின் பெயரில் ரூ. 1,12,69,664 வழங்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் 365 நோயாளிகளின் பெயரில், அவர்களின் சிகிச்சைக்காக ரூ.33,70,985 செலுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களின்படி, ஒரு நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு இறந்தோலோ அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பு இறந்தாலோ, மருத்துவமனை வழியாக அந்த நோயாளிக்கு பணம் செலுத்தப்படுகிறது.
இது தொடர்பான சி.ஏ.ஜி அறிக்கையில் கூறியிருப்பதாவது பின்வருமாறு:-
"ஜூலை 2020ல் டெஸ்க் தணிக்கையின் போது, முந்தைய சிகிச்சையின் போது 'இறந்ததாக' காட்டப்பட்ட அதே நோயாளியின் முன் அங்கீகார கோரிக்கையை ஐ.டி அமைப்பு (டி.எம்.எஸ்) திட்டத்தின் கீழ் பயன் பெற அனுமதிப்பதாக தேசிய சுகாதார ஆணையத்திடம் (என்.ஹெச்.ஏ) அறிக்கை அளிக்கப்பட்டது. இதை ஒப்புக்கொண்ட என்.ஹெச்.ஏ டி.எம்.எஸ்-ல் இறந்ததாகக் காட்டப்பட்ட நோயாளியின் ஆயுஷ்மான் பாரத் ஐ.டி மேலும் பலன் பெறுவதற்கு முடக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த 22 ஏப்ரல் 2020 அன்று தேவையான காசோலைகள் வைக்கப்பட்டுள்ளன என்று ஜூலை 2020ல் தெரிவித்தது.
ஆனால், அந்த பலன் முறையாக சென்றடைகிறதா என்பதை அறிந்து கொள்ள தேவையான சோதனைகள் பின்பற்றப்படவில்லை. என்.ஹெச்.ஏ ஆகஸ்ட் 2022ல், பல்வேறு செயல்பாட்டு காரணங்களுக்காக கணினியில் உண்மையான தேதியை விட முந்தைய தேதியை உள்ளீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த குறைபாடுகளைக் குறிப்பிட்டு, அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றன, மேலும், மாநில சுகாதார ஆணையத்தின் முன் அங்கீகாரம், உரிமைகோரல் சமர்ப்பிப்பு மற்றும் இறுதி உரிமைகோரல் ஒப்புதல் போன்ற பதில்கள் ஏற்கத்தக்கவை அல்ல."
இவ்வாறு சி.ஏ.ஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil