அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்: ஆலோசனையில் பிரதமர் அலுவலகம்

ஆளும் அரசு ஒற்றை வாக்காளர் பட்டியல் தேவையற்றை செலவீனங்களை குறைக்கும் என்று கூறியுள்ளது.

ஆளும் அரசு ஒற்றை வாக்காளர் பட்டியல் தேவையற்றை செலவீனங்களை குறைக்கும் என்று கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
PMO explores common voter list for Lok Sabha, state and local polls

Ritika Chopra

PMO explores common voter list for Lok Sabha, state and local polls :  நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தலை நடுத்துவது குறித்து இம்மாதத்தின் துவக்கத்தில் பிரதமர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி, சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலுகளுக்கான பொதுவான வாக்காளார்கள் பட்டியல் தயாரிக்கும் சாத்தியகூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

Advertisment

ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஷ்ரா தலைமையில் இரண்டு விருப்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முதலாவதாக, 243K மற்றும் 243ZA பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவருவது. இது ஒரே நேரத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்தலை நடத்துவதை கட்டாயமாக்கும். இரண்டாவது, மாநில அரசுகள் அந்தந்த சட்டங்களை மாற்றியமைத்து, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்கான தேர்தல் ஆணையத்தின் (தேர்தல் ஆணையம்) வாக்காளர் பட்டியலை ஏற்றுக்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, சட்டமன்ற செயலாளார் நாராயண ராஜூ, பஞ்சாயத்து ராஜ் செயலாளர் சுனில் குமார் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மூன் று பிரதிநிதிகள், பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். 243K மற்றும் 243ZA அரசியல் சாசன பிரிவு பஞ்சாயத்து மற்றும் முனிசிபாலிட்டி தேர்தலுக்கானது. மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் கண்காணிப்பு, தேர்தல் மற்றும் வாக்காளர்கள் பட்டியலை தயாரித்தல் மற்றும் மாநிலத்தில் இதர தேர்தல்களை நடத்த வழிவகை செய்கிறது.

மறுபுறம், அரசியலமைப்பின் பிரிவு 324 (1) பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான அனைத்து தேர்தல்களுக்கும் தேர்தல் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதை மேற்பார்வையிடவும், நேரடியாக கட்டுப்படுத்தவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கு சொந்த தேர்தல் பட்டியலைத் தயாரிக்க மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சியை தேர்தல் ஆணையத்துடன் ஒருங்கிணைக்க வேண்டியதில்லை.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

Advertisment
Advertisements

ஆனால் தற்போது தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலையே முனிசிபாலிட்டி தேர்தல்களுக்கும் பஞ்சாயத்து தேர்தல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். ஆனால் உ.பி., உத்ரகாண்ட், ஒடிஷா, அசாம், ம.பி., கேரளா, அருணாச்சலப்பிரதேசம், நாகலாந்து, மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்களுக்கு தங்களின் சொந்த வாக்காளர் பட்டியலை வைத்துள்ளனர்.

உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்கு தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலை ஏற்றுக்கொள்ள மீதமுள்ள மாநிலங்களை வற்புறுத்துவதற்கு சுனில் குமார் ஆதரவாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மிஸ்ரா அமைச்சரவை செயலாளரிடம் மாநிலங்களைக் கலந்தாலோசித்து, ஒரு மாதத்தில் அடுத்த கட்ட முடிவுகளை பரிந்துரிக்க உத்தரவிட்டுள்ளார் மிஸ்ரா.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பொதுவாக வாக்காளர் பட்டியலும் இடம் பெற்றிருந்தது. மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவதற்கான கட்சியின் உறுதிப்பாட்டுடன் இது இணைகிறது. ஒற்றை வாக்காளார் பட்டியல் என்பது ஒன்றும் புதிதல்ல. சட்ட ஆணையம் தனது 255 வது அறிக்கையில் 2015இல் பரிந்துரைத்தது. தேர்தல் ஆணையமும் இதே போன்று 1999ம் மற்றும் 2004ம் ஆண்டு பரிந்துரை செய்தது. தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதில் இணக்கமற்றது என்று அது குறிப்பிட்டிருந்தது. மேலும் இரண்டு ஏஜென்சிகளுக்கும் இடையே பணியை நகல் எடுக்கிறது மாநில தேர்தல் ஆணையம் என்றும் கூறப்பட்டது. மேலும் இதனால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்ட தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் பெயர்கள் ஒரு பட்டியலில் இருக்கிறது. ஆனால் மற்றொன்றில் இல்லை என்பதையும் மேற்கோள் காட்டியது.

ஆளும் அரசு ஒற்றை வாக்காளர் பட்டியல் தேவையற்றை செலவீனங்களை குறைக்கும் என்று கூறியுள்ளது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பேசிய போது, ஒற்றை வாக்காளார் பட்டியல் தேசிய கருவூல பணத்தையும், ஏஜென்சிகள் தேர்தல் நடத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளும் மிச்சப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இதற்கு மிகப்பெரிய அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் பயிற்சி தேவைப்படும் என்று சுட்டிக்காட்டினார். ஒரு பொதுவான தேர்தல் பட்டியலை வைத்திருப்பது, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலை ஏற்றுக்கொள்ள மாநில அரசுகளை நம்ப வைப்பதற்கு போதுமானதாக இருக்காது. தேர்தல் ஆணையத்தின் வாக்குச்சாவடி வார்ட்களுடன் இணைந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல், மாநில அரசின் தேர்தல் வார்டுகளுடன் ஒத்திருக்குமாறு மாற்றப்பட வேண்டும். நம்மிடம் டிஜிட்டல் தொழில்நுட்பம் இருக்கிறது. அதனை கொண்டு இம்முயற்சியை எளிமையாக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Election Commission

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: