scorecardresearch

பிரதமர் அலுவலக மேற்பார்வையில், கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் வாரணாசி

பேரழிவு மேலாண்மை நிதியிலிருந்து 400 சிலிண்டர்களை ஆர்டர் செய்தேன். நிறுவனம் பணத்தை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை அனுப்பவில்லை. ஆனால் பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டிற்கு பிறகு அவர்கள் அதை அனுப்பினர்.

PMO watching, Covid command centre tracks easing in Varanasi

 Dipankar Ghose

PMO watching Covid command centre tracks easing in Varanasi : வாரணாசியின் ஹரிஷ் சந்திரா படித்துறையில் நின்ற வண்ணம் சாகர் சௌத்ரி தன்னைச் சுற்றி எரிகின்ற 5 சடலங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார். மூன்று மெட்டல் ஸ்டேண்ட்களில் எரிந்து கொண்டிருக்கிறது. ஒன்று படித்துறையில் எரிந்து கொண்டிருக்க, மற்றொரு சடலத்தின் மேல் காவி நிற துணி போர்த்தப்பட்டிருந்தது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சௌத்ரி, அம்மண்ணில் இறந்து போகும் மக்களுக்காக இறுதி சடங்கு நடத்தி வருபவர். ஆனால் கடந்த 10 நாட்களாக அவர் கண்ட காட்சிகளை அவர் வாழ்நாளிலும் மறக்கமாட்டார். “இந்த இடத்தில் 60 சடலங்கள், துளியும் இடைவெளி இன்றி வைக்கப்பட்டிருந்தன. ஹரீஷ் சந்திரா படித்துறையில் இறுதி சடங்கு செய்யப்படும் நபர்கள் மோட்சம் அடைவார்கள் என்று நம்புகின்றனர். ஆனால் அன்று இறுதி சடங்குகள் கூட முடிக்கப்படவில்லை.

மேலும் படிக்க : சென்னைக்குள் பிற பகுதிகளுக்கு செல்லவும் இ-பதிவு கட்டாயம்; எச்சரிக்கும் காவல்துறை

ஏப்ரல் மாதத்தில் அந்த வாரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போது, எரிக்க தேவையான மரங்களுக்கு பற்றாக்குறை ஏற்படவே 7 மணி நேரம் வரை காத்திருந்த அவலம் ஏற்பட்டது. பழைய குப்பை கொட்டும் கிடங்கு தற்போது பதிவு செய்யப்பட்ட கொரோனா நோயால் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் இடமாக மாறியுள்ளது. கொரோனா அற்றவர்களின் சடலங்களை தகனம் செய்ய ரூ. 5000, கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை எரிக்க ரூ. 7000, மின் தகனத்திற்கு ரூ. 500 என்று விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. முன்பு இரண்டாக இருந்த படித்துறை தற்போது நான்காக மாறியுள்ளது. ஆனால் செயல்பாட்டு உள்கட்டமைப்பு சவாலாக இருக்கும் உத்திரபிரதேசத்தில் பிரதமரின் தொகுதி தனித்து தெரிவதற்கு காரணம் என்ன? இது ஒரு வகையான கோவிட் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாகும். இது படித்துறையில் இருந்து 3 கி.மீக்கு அப்பால் அமைந்துள்ளது.

டிஜிட்டல் டேஷ்போர்டுடன் காணப்படும் இந்த இடத்தில் அனைத்து தொழில்நுட்பங்களும் இணைக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் கௌஷல் ராஜ் ஷர்மாவின் கூற்றுப்படி, வாரணாசியின் கொரோனா நெருக்கடி இங்கிருந்து தான் கையாளப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாத இறுதி 10 நாட்கள் போல் இல்லாமல் மீட்பு பணிகள் மெல்ல ஆரம்பமாகிறது என்றார்.

நான் இப்போது ஒரு நாளில் நான்கைந்து மணிநேரம் இங்கு செலவிடுகிறேன், ஆனால் ஆக்ஸிஜன் நெருக்கடி ஏற்பட்டபோது, ​​அதிகாலை 2 மணி வரை நாங்கள் இங்கு அமர்ந்திருந்தோம். மருத்துவமனைகளில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தன என்று சர்மா கூறினார். ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 23 வரை மிகவும் சவாலான காலத்தை நாங்கள் சந்தித்தோம்.

இரண்டாம் அலை உச்சம் பெற்ற போது, ஏப்ரல் 25ம் தேதி அன்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 17,321. ஏப்ரல் 24ம் தேதி அன்று மட்டும் பதிவான புதிய வழக்குகள் 2,796. ஏப்ரல் 26ம் தேதி ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 26. கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த போது ஏற்பட்ட பாதிப்புகளைக் காட்டிலும் இது அதிகம். ஆகஸ்ட் 14ம் தேதி அன்று 2,355 நபர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தனர். ஆக்ஸ்ட் 9ம் தேதி அன்று 301 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஜூலை 30ம் தேதி அன்று 7 பேர் மரணம் அடைந்தனர்.

புள்ளிவிவரங்கள் இந்த மாதத்தில் சரிவைக் காட்டுகின்றன. மே 15 அன்று, தினசரி புதிய வழக்குகள் 466, சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 7,162, இறப்புகள் 798 என்று பதிவானது. ஒரு மாதத்திற்கு முன்பு ஏப்ரல் 15ம் தேதி அன்று புதிய வழக்குகளின் எண்ணிக்கை 1,859 ஆக இருந்தது. செயல்பாட்டில் இருந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 11, 562, இறப்புகள் 492 ஆக உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி அன்று இந்த உதவி மையத்தை அழைத்தவர்களின் எண்ணிக்கை 853 ஆக இருந்தது.

இந்த உதவி மையம் தொற்றுநோய்க்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போக்குவரத்து மற்றும் காவல்த்துறை நிர்வாக அமைப்பாக செயல்பட்டு வந்தது. இந்த உதவி மையத்திற்கு வெளியே மோடி மற்றும் ஏ.கே. ஷர்மாவின் புகைப்படங்களுடன், கோவிட் ப்ரபாரி என்று எழுதப்பட்டுள்ளது. உள்ளே 40 கணினிகள், 21 தொலைபேசி லைன்கள், ஒரு மருத்துவனையில் சேர்க்கும் பிரிவு, ஒரு ஆம்புலன்ஸ் ஒதுக்கீட்டு பிரிவு மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கான 10 போன் லைன்கள் வைக்கப்பட்டுள்ளது. முதல் தொற்றின் போது 250 நபர்கள் இங்கே பணியாற்றினார்கள். பிறகு அது 30 ஆக குறைக்கப்பட்டது. பிறகு மீண்டும் 355 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று ஷர்மா கூறினார்.

1077 என்ற கட்டணமில்லாத கோவிட் எண்ணில் அழைப்புகளும் மையத்தால் கையாளப்படுகின்றன, இது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒரு செயல்முறையின் ஒரு பகுதியாக மற்ற அமைப்புகளுக்கு வழிகாட்டுகிறது. “52 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 8 அரசு மருத்துவமனைகள் 2 வாட்ஸ்அப் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகள் உடனடியாக டாஷ்போர்டில் பதிவேற்றப்பட்டு, மருத்துவமனைகள் காலியிடத்தைப் பொறுத்து வழக்குகளை சேர்க்கப்படுகிறது. பின்னர், ஆம்புலன்ஸ் தேவையா இல்லையா என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம், ”என்று ஷர்மா கூறினார்.

முன்னதாக நாங்கள் விவரங்களை காகிதத்தில் எழுதி வைத்தோம். 25 நாட்களுக்கு முன்பு தான் புதிய சிஸ்டம் உருவாக்கப்பட்டது. அழைப்புகளை எடுப்பதில் தாமதம் ஆனால் உயிரிழப்புகள் ஏற்படும். நாங்கள் நேரத்தை குறைத்தோம். தொழில்நுட்ப உள்ளீட்டை அத்ஹிகப்படுத்தினோம். கூகுள் ஷீட்டில் வேலையை துவங்கினோம். எங்களின் ஊழியர்களுக்கு பேப்பர் இல்லாமல் பணியாற்ற கற்றுக் கொடுத்தோம்.

மையம் ஆக்ஸிஜன் மேலாண்மை, மாதிரி கண்காணிப்பு மற்றும் தொடர்பு தடமறிதல் மற்றும் சோதனைகளையும் கையாளுகிறது. சனிக்கிழமையன்று, இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த மையத்தை பார்வையிட்டபோது, ​​190 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் 7,113 மருந்துகளை வழங்குவதற்கு இது வசதி செய்தது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 7,886 நபர்களை மேற்பார்வையிட்டது, மேலும் 35 நபர்களை மருத்துவமனையில் அனுமதிக்க 367 அழைப்புகளை பெற்றது. பிரதம மந்திரி அலுவலகத்தின் (பி.எம்.ஓ) மூன்று அதிகாரிகள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஒருநாள் விட்டு ஒருநாள் பிரதமருக்கு அறிக்கை சமர்பிக்கப்படுகிறது என்று ஷர்மா கூறினார்.

”இது மிகவும் சாதகமான மற்றும் ஆக்கபூர்வமான ஆதரவாக இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, எனது பேரழிவு மேலாண்மை நிதியிலிருந்து 400 சிலிண்டர்களை ஆர்டர் செய்தேன். நிறுவனம் பணத்தை எடுத்துக் கொண்டு ஆக்ஸிஜனை அனுப்பவில்லை. ஆனால் பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டிற்கு பிறகு அவர்கள் அதை அனுப்பினர். இதேபோல், ஆக்ஸிஜன் ஆலையைத் தொடங்க அவுரங்காபாத்தில் ஒரு நிறுவனத்திற்கு ரூ .1 கோடி கொடுத்திருந்தோம். அடுத்த நாள் ஆலை அமைக்கத் தொடங்குவதாக அவர்கள் சொன்னார்கள், ஆனால் அவ்வாறு செய்யவில்லை. PMO அழுத்தம் கொடுத்தது, ”என்று அவர் கூறினார்.

2000 ரெம்டெசிவிர் மருந்தை நாங்கள் கூடுதலாக பெற்றோம். வாரணாசி, உ.பியில் மற்ற அனைத்து பகுதிகளைக் காட்டிலும் கூடுதலாக இம்மருந்தை விநியோகித்துள்ளது. லக்னோ மற்றும் நொய்டாவைக் காட்டிலும் இது அதிகம். இதனால் இங்கிருக்கும் மக்கள் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார். மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களில் 647 நபர்கள் வாரணாசியை சேர்ந்தவர்கள். ஏன் என்றால் இது பிரதமரின் தொகுதி. நேரம் இதில் மிகவும் முக்கியமானது. அதனால் தான் நாங்கள் ஒன்றரை மாதத்தில் ஒரு “கம்ஃபர்ட்டான” இடத்தில் இருக்கின்றோம். இல்லையென்றால் கடந்த ஆண்டைப் போன்றே மூன்று-நான்கு மாதங்கள் உழைத்திருக்க வேண்டும் என்று ஷர்மா கூறினார்.

மூன்றாவது அலைக்கு நாடு தயாராகி வருகிறது. 3 ஆக்ஸிஜன் ஆலைகள் அரசு மருத்துவமனைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நான்காம் ஆலை கட்டப்பட்டு வருகிறது. 620 பைப்லைன்களுடன் 180 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பெறபப்ட்டுள்ளன. 500 நெபுலீசர்களுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளது. “இரண்டாவது அலையின் மூர்க்கத்தன்மை பற்றி தங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். மூன்றாவது பற்றி அவர்களுக்குத் தெரியும், இல்லையா? உடல்கள் மீண்டும் குவிந்தால், காசி விஸ்வநாதர் மன்னிக்க மாட்டார், ”என்றார் சவுத்ரி. ஏன் என்றால் அங்கு ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட காயம் இன்னும் மறையவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Pmo watching covid command centre tracks easing in varanasi