குடும்ப அரசியல் பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி பிரச்னை என்று காங்கிரஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தின உரையில் குடும்ப அரசியல் குறித்து தாக்கிப் பேசினார். இது தொடர்பாக பதில் அளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா இது அவர்களின் சொந்தப் பிரச்னை என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “குடும்ப அரசியல் என்பது பாரதிய ஜனதா கட்சியின் உள்கட்சி பிரச்னை. அவர்களின் கட்சியை சேர்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா, கிரிக்கெட் வாரியத்தில் உயர் பதவி வகிக்கிறார்.
அவரது அமைச்சரவை சகாக்கள் கட்சியில் முக்கிய அங்கம் வகிக்க நினைக்கின்றனர். இது அவருக்கு பிரச்னையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆதலால் அவ்வாறு பேசியிருப்பார்” என்றார்.
மேலும், “விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, பொருளாதார வளர்ச்சி, அனைவருக்கும் வீடு என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் ஒன்றையும் நிறைவேற்றவில்லை” என்றும் குற்றஞ்சாட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையின்போது குடும்ப அரசியல் குறித்து பேசினார். அப்போது அவர்களின் எண்ணம் வீட்டை உயர்த்திக் கொள்வதில் மட்டும்தான் இருந்தது. நாட்டைப் பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil