/tamil-ie/media/media_files/uploads/2019/06/lol.jpg)
PM’s free laptop scheme Pradhan Mantri Muft Laptop Vitran Yojana 2019
PM’s free laptop scheme Pradhan Mantri Muft Laptop Vitran Yojana 2019 : ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாக்பூரில் வசித்து வந்தவர் ராகேஷ் ஜங்கித். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தான் ஐ.ஐ.டி வழங்கும் மேலாண்மை மற்றும் பொருளாதாரம் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று கூறி ”Pradhan Mantri Muft Laptop Vitran Yojana 2019” என்ற டேக் லைனில் ஒரு இணையத்தினை நடத்தி வந்துள்ளார் அவர்.
நாடாளுமன்ற மக்கள் அவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றததைத் தொடர்ந்து 2 கோடி இளைஞர்களுக்கு இலவச லேப்டாப் தருவதாக அதில் விளம்பரப்படுத்தியுள்ளார் ராகேஷ். அந்த இணையத்தில் பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் மேக் - இன் - இந்தியா லோகோ ஆகியவற்றையும் இணைத்துள்ளார் அவர். இலவச லேப்டாப் பெற விரும்பும் மக்கள் நேரடியாக அந்த இணையத்திற்கு சென்று பெயர், வயது, போன் நம்பர் மற்றூம் மாநிலம் ஆகியவற்றை பதிவு செய்ய வசதியாக அதனை உருவாக்கியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் அவர் மீதோ அவரின் இணையத்தின் மீதோ யாரும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவருடைய இணையத்தின் பேஜ்வியூக்கள் இயல்புக்கு மாறாக இருந்ததைத் தொடர்ந்து அவரை கண்காணித்து வந்துள்ளனர் சைபர் செல் காவல்துறையினர்.
அவரை கைது செய்து விசாரணை நடத்திய போது, கூகுள் ஆட் சென்ஸ் மூலமாக நிறைய சம்பாதிப்பதற்கு இப்படி ஒரு யுத்தியை தேர்வு செய்ததாகவும், மேலும் மக்கள் தரும் தரவுகளை சைபர் கிரிமினல்களுக்கு விற்றுவிட திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.