PMs Modi word Net Zero 2070 clean and green 2030: காலநிலை செயல்பாட்டில் மேலும் பல முக்கிய நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் புதிய ஆற்றல் தொடர்பான அறிவிப்புகளுடன் திங்கள் கிழமை அன்று மோடி, இந்தியா 2030ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்ட உமிழ்வை ஒரு பில்லியன் டன் வரை இந்தியா குறைக்கும் என்று அறிவித்தார்.
கிளாஸ்கோவில் நடந்த காலநிலை மாற்ற கூட்டத்தில் ஐந்து பெரிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர் அதனை பஞ்சாமிர்த் என்று அழைத்தார். நிகர-பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை ஒப்புக்கொள்ளும் உலகளாவிய கோரிக்கைகளையும் மோடி ஏற்றுக்கொண்டார். அந்த இலக்கை இந்தியா 2070ம் ஆண்டில் அடையும் என்றும் கூறினார். ஜி20 நாடுகளில் இந்தியா மட்டுமே இதுவரை நிகர பூஜ்ஜிய இலக்கை இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கூக்குரல்கள் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அது தவிர, பாரீஸ் ஒப்பந்தத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் முந்தைய காலநிலை இலக்குகளை பிரதமர் கணிசமாக அதிகரித்தார். 2030 ஆம் ஆண்டிற்குள் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனுக்கான இந்தியாவின் இலக்கான 450ஜிகா வாட்ஸிலிருந்து 500 ஜிகா வாட்ஸாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் மொத்த எரிசக்தி கலவையில் புதைபடிவமற்ற எரிபொருளின் பங்கு 40 சதவீதத்திற்கு பதிலாக 2030ஆம் ஆண்டுக்குள் 50%-ஆக அதிகரிக்கப்படும் என்று கூறினார்.
கூடுதலாக நாட்டின் உமிழ்வு தீவிரம் அடைதல் அல்லது ஒரு ஜிடிபி அலகுக்கான உமிழ்வு 2030ம் ஆண்டுக்குள் 2005ம் ஆண்டில் நிலவிய அளவிற்கு, அதாவது 45%, குறைக்கப்படும். தற்போதுள்ள இலக்கில், அந்த தேதிக்குள் உமிழ்வு தீவிரத்தை 33 முதல் 35 சதவீதம் வரை குறைப்பதாக இந்தியா உறுதியளித்திருந்தது.
இந்தியாவின் காலநிலை இலக்குகள் மற்ற நாடுகள் நாடுகள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் போல் அல்ல என்பதை மீண்டும் நினைவு கூறிய மோடி, பாரிஸ் காலநிலை சந்திப்பு மாநாட்டைக் காட்டிலும் மேலானது. இது ஒரு உணர்வு மற்றும் அர்பணிப்பு என்றும் அவர் தெரிவித்தார். , அந்தக் கூட்டத்தில் இந்தியா தனக்குத்தானே நிர்ணயித்த இலக்குகளைக் குறிப்பிட்டும் பேசினார்.
ஆண்டுக்கு 3 பில்லியன் டன் பசுமையக வாயுக்களை வெளியேற்றும் இந்தியா உலக அளவில் அதிக பசுமையக வாயுக்களை வெளியேற்றும் மூன்றாவது பெரிய நாடாகும். World Resources Institute தரவுத்தளத்தின்படி, 2010ல் 2.5 பில்லியன் டன்னாக இருந்த இந்தியாவின் மொத்த பசுமையக வாயு வெளியீட்டு அளவானது 2018ம் ஆண்டு 3.3 பில்லியன் டன்னாக உயர்ந்தது. இதே நிலை தொடரும் பட்சத்தில், இன்றைக்கும் 2030ம் ஆண்டுக்கும் இடையேயான காலகட்டத்தில் இந்தியாவின் கணிக்கப்பட்ட உமிழ்வானது 30 முதல் 32 பில்லியன் டன்னாக இருக்கும்.
ஆனால் இந்தியாவின் உமிழ்வு 4-5% ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. எனவே இப்போது மற்றும் 2030க்கு இடையேயான மொத்த உமிழ்வானது சுமார் 40 பில்லியன் டன்கள் வரம்பில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகையில் தான் ஒரு டன் குறைப்பு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முழுமையான உமிழ்வுகள் அடிப்படையில் எந்த ஒரு காலநிலை இலக்கு குறித்தும் இந்தியா அறிவிப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு, முன், அதன் உமிழ்வுப் பாதையை மாற்றுவதற்கான மிக நெருக்கமான குறிப்பை உமிழ்வு தீவிரம் என்ற பெயரில் இந்தியா பயன்படுத்தியது. சர்வதேச காலநிலை மாற்றம் கட்டமைப்பின் கீழ் வளர்ந்த நாடுகள் மட்டுமே அவற்றின் முழுமையான உமிழ்வைக் குறைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றன. அதனை எதிர்பார்க்கவும் செய்கின்றன. தற்செயலாக, இந்தியா போராடிக்கொண்டிருக்கும் வனத்துறை இலக்கை மோடி குறிப்பிடவில்லை.
பாரிஸ் உடன்படுக்கையின் கீழ் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மூன்று வாக்குறுதிகளில் ஒன்று, 2.5 பில்லியன் முதல் 3 பில்லியன் கார்பன் காடுகளை விரிவுபடுத்தும் முயற்சிகளின் கீழ் மூழ்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பதாகும். மற்ற இரண்டும் கார்பன் அடர்த்தியை குறைப்பது மற்றும் மொத்த ஆற்றல் கலவையில் புதைபடிவமற்ற எரிபொருள் ஆற்றலின் விகிதத்தை அதிகரிப்பது ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். தற்போது இவை இரண்டும் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் புதிய இலக்குகள், முக்கியமாக வளர்ந்த நாடுகளில் இருந்து அதிக லட்சிய நடவடிக்கை இல்லாததால், கடந்த சில நாட்களாக மிக மெதுவாக முன்னேறி வரும் காலநிலை பேச்சுவார்த்தைக்கு புதிய உந்துதலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 முதல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டும் என்ற பத்தாண்டு கால வாக்குறுதியை வளர்ந்த நாடுகள் நிறைவேற்றத் தவறியது குறிப்பாக கவலையை அளிக்கும் ஒன்றாக உள்ளது. அந்த காலக்கெடு கடந்த வாரம் மூன்று ஆண்டுகள் வரை தள்ளி வைக்கப்பட்டது.
மோடி இது குறித்து வளர்ந்த நாடுகளை கடுமையாகக் கண்டித்து, 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கூட போதுமானதாக இல்லை என்றும், அது கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
காலநிலை நிதி தொடர்பாக அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் வெற்றுத்தனமாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். நாம் அனைவரும் காலநிலை நடவடிக்கைகளில் நமது லட்சியத்தை அதிகரிக்கும்போது, பாரிஸ் ஒப்பந்தத்தின் போது இருந்த காலநிலை நிதி மீதான லட்சியம் அப்படியே இருக்க முடியாது என்று கூறிய அவர் வளர்ந்த நாடுகளை ஒவ்வொரு ஆண்டும் 1 ட்ரில்லியன் டாலர்களை வழங்குமாறு கூறினார்.
மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் தீர்க்கமான முடிவுக்காக கடுமையாக உழைத்து வரும், இந்த மாநாட்டை இந்த முறை வழங்கும் இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கிளாஸ்கோவை ஒரு திருப்புமுனையாக உலகம் மாற்றத் தவறினால், இளைஞர்களின் பொறுமையின்மை தாங்க முடியாததாகிவிடும் என்றார். மேலும் காலநிலை மாற்றம் பற்றி நாம் உண்மையாக உணரும் தருணம் என்றும் அவர் கூறினார்.
கிளாஸ்கோ மாநாட்டு அர்த்தமுள்ள ஒன்றை முறையாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவில்லை என்றால் இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து காலநிலை தொடர்பான மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் வெறும் வாய்வார்த்தை தவிர ஒன்றும் இல்லை என்று க்ரேட்டா தன்பெர்க்கின் சொற்றொடர் ஒன்றை ஜான்சன் கூறினார்.
நாம் தவறிழைத்தால், வாக்குறுதிகளை தவறவிட்டால் அல்லது தோல்வி அடைந்தால் அவர்கள் நம்மை மன்னிக்கவே மாட்டார்கள். வரலாற்றை மாற்றும் கிளாஸ்கோ மாநாடு வரலாற்றை திருப்பும் போது தோல்வி அடைந்தது என்று அவர்கள் அறிவார்கள் என்றும் போரீஸ் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.