PNB Fraudulent Nirav Modi : பஞ்சாப் தேசிய வங்கியில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டவர் நீரவ் மோடி. 48 வயதாகும் நீரவ் மோடி குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஆவார். பஞ்சாப் தேசிய வங்கியில் சுமார் 13,500 கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் மிக முக்கிய குற்றவாளியாக பட்டியலிடப்பட்டிருக்கிறார் மோடி.
மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும், அவருடைய உறவினர்கள் மற்றும் நிர்வாகிகள் உதவி மூலமாக தனக்கு தேவையான பணத்தினை பெற்றுக் கொள்கிறார் மோடி என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவருடைய துபாய் மாற்றும் ஹாங்காங் நிறுவனத்தில் இருந்து முறையே 66 கோடி மதிப்பிலான வைரங்கள், 6.5 கோடி ரூபாய் பணம், 150 பெட்டிகள் நிறைய முத்துகள் மற்றும் 50 கிலோ தங்கம் ஆகியவற்றை எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
தற்போது இங்கிலாந்து ஜெயிலில் இருக்கும் அவர் தன்னுடைய தங்கை உதவியுடன் பெல்வெத்ரே ஹோல்டிங்க்ஸ் க்ரூப் லிமிட்டட் பெயரில் சிங்கப்பூர் வங்கியில் இருக்கும் பணத்தை ஜூரிச்சில் இருக்கும் தன்னுடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றியுள்ளார். பெல்வெத்ரே ஹோல்டிங்க்ஸ் க்ரூப் லிமிட்டட் நிறுவனத்தை நீரவ் தங்கை பூர்வி மோடி நடத்தி வருகிறார்.
PNB Fraudulent Nirav Modi : எங்கே சென்றார்கள் நீரவ் மோடியின் கீழ் வேலை செய்த நிர்வாகிகள் ?
தற்போது மோடியின் மற்றொரு நிர்வாகியான சுபாஷ் பராப் என்பவரை எகிப்தில் கைது செய்துள்ளனர் அதிகாரிகள். 46 வயதான பராபிற்கு 2018 ஜூலையில் ரெட் நோட்டிஸ் விடுத்தது சர்வதேச போலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் நேசனல் வங்கியில் 6 ஹாங்காங் கம்பனிகளை மேற்கொள் காட்டி கடன் வாங்கப்பட்டது. அந்த ஆறு நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை மேற்பார்வையிட்டது சுபாஷ்.
மத்திய புலனாய்வுத் துறை நடத்தும் விசாரணையில், மோடி 7 நாடுகளுக்கு பிசினஸ் விசா அல்லது ரெசிடென்சி விசா வைத்துள்ளார் என்று கண்டறிந்த்துள்ளது. கனடாவில் வைத்திருக்கும் பிசினஸ் விசா 2019ம் ஆண்டுடன் முடிவடைகிறாது. அமெரிக்காவில் வைத்திருக்கும் விசாஅ 2020லும், யூ.கேவில் 2025லும், செங்கென் நாடுகளில் வைத்திருக்கும் விசா 2019ம் ஆண்டிலும் நிறைவடைகிறது. ஹாங்காங், துபாய், மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் எம்ப்ளாய்மெண்ட் விசா வைத்துள்ளார் மோடி.
லண்டன் ஜெயிலில் இருக்கும் அவருக்கு இரண்டு முறை பிணை தர மறுத்துவிட்டது நீதிமன்றம். ஏப்ரல் 26ம் தேதி இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 2018ன் போது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தி அறிக்கையின் படி, நீரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தின் 12 இயக்குநர்களை விடாப்பிடியாக கெய்ரோவிற்கு அனுப்பி வைத்தார் நீரவ் மோடி. சிலர் இந்தியா திரும்பிவிட்டனர். திரும்பாதவர்களில் ஒருவர் தான் இந்த சுபாஷ். அவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.