Advertisment

2.6 மில்லியன் டாலர் மோடி : நிரவ் மோடியின் சகோதரர் மீது அமெரிக்காவில் வழக்கு

Nirav Modi’s brother Nehal charged in $2.6 million fraud : மன்ஹாட்டனில் வைர நிறுவனங்களில் ஒன்றிலிருந்து 2.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வைரங்கள் மோசடி

author-image
WebDesk
New Update
2.6 மில்லியன் டாலர் மோடி : நிரவ் மோடியின் சகோதரர் மீது அமெரிக்காவில் வழக்கு

Nirav Modi’s brother Nehal charged in $2.6 million fraud :  இந்திய வங்கிகளில் 12,500 கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹால் மோடி, மன்ஹாட்டனில் வைர நிறுவனங்களில் ஒன்றிலிருந்து 2.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள  வைரங்களை மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

Advertisment

நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில்," நோபல் டைட்டன் ஹோல்டிங்ஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான நேஹால், மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2015 காலகட்டங்களில் அமெரிக்காவின் எல்எல் டி (LLD) டயமண்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து, 2.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வைரங்களை பெற முறைகேடான ஆவணங்களை பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

Costco Wholesale Corporation என்ற நிறுவனத்துக்கு விற்பதற்குப் பதிலாக வைரங்களை தனிப்பட்ட தேவைக்காக நிஹல் மோடி விற்பனை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என நிஹல் மோடி நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஃபயர் ஸ்டார் என்ற பெயரில் பிரபலமான வைர நகை நடத்தி வந்த நிரவ் மோடிக்கு, தலைநகர் டெல்லியில் சாணக்கியபுரி மற்றும் டிஃபன்ஸ் காலனியில் மட்டுமின்றி, மும்பை, சூரத் போன்ற ஊர்களிலும் வைர நகை விற்பனை நிலையங்கள் உள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையின் சில அதிகாரிகளோடு கூட்டணி அமைத்து, இந்திய வங்கிகளில் 12,500 கோடி நீரவ் மோடி மோசடி செய்தார். தற்போது, தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Nirav Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment