பஞ்சாப் வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி மற்றும் அவருடைய தாய்மாமன் மெகுல் சோக்ஷி இருவரையும் தேடி வருகிறது இண்டெர்போல் காவல் துறை. 13,600 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி மெகுல் சோக்ஷி ஆவார்.
மோசடி தொடர்பான பிரச்சனைகள் வெளியில் வருவதற்கு முன்னமே, நீரவ் மோடி, அவருடைய மனைவி, மற்றும் சோக்ஷி இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டார்கள்.
மிக சமீபத்தில் நீரவ் மோடி மற்றும் சோக்ஷி இருவரையும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என்று அறிவித்து அவர்களைப் பிடிப்பதற்காக சர்வதேச காவல்துறையின் உதவியை நாடியது இந்திய புலனாய்வுத் துறை.
ஆண்ட்டிகுவா நாட்டு குடியுரிமை பெற்ற மெகுல் சோக்ஷி
இந்தியாவை விட்டு வெளியேறிய சோக்சி 1.3 கோடி ரூபாய் கொடுத்து ஆண்ட்டிகுவா நாட்டின் குரியுரிமையை இந்த வருடம் ஜனவரி மாதம் வாங்கியுள்ளார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது இந்திய புலனாய்வுத் துறை. மேலும் ஆண்ட்டிகுவா அரசின் உதவியை நாடியுள்ளது மத்திய அரசு.
இது குறித்து, சோக்ஷியின் வக்கீல் டேவிட் டோர்செட், சோக்ஷியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். To read this article in English
அதன்படி, இந்திய அரசாங்கம் சோக்ஷியின் மீது அளிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், அவை உண்மைக்கு புறம்பானவை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், சோக்ஷி தன்னுடைய வர்த்தக எல்லையை விரிவுப்படுத்த விரும்பிய சோக்ஷி அதற்காக ஆண்ட்டிகுவா நாட்டினை தேர்வு செய்துள்ளார்.
இந்நாடு அவரின் வர்த்தகம் தொடர்பான பயணங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கியிருக்கிறது. அச்சலுகையினை பயன்படுத்தி சுமார் 132 உலக நாடுகளுக்கு ஃப்ரி -விசா மூலம் பயணிக்கலாம் என்பதாகும்.