ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு சிம் கார்டுகள் வழங்கிய விவகாரம்; ஒரே வாரத்தில் 30 பேரை கைது செய்த போலீசார்

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் தங்கள் சிம் கார்டுகளை நண்பர்களுக்கு கொடுத்த நிலையில் அவர்கள் உரிமையாளர்களுக்கு தெரிவிக்காமல் தீவிரவாதிகளுக்கு கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரில் ஒரே வாரத்தில் 30 பேர் கைது

தீவிரவாதிகளுக்கு தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டுகளை வழங்கியதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் கடந்த வாரத்தில் 30 பேரை கைது செய்துள்ளனர். தீவிரவாதிகளின் தகவல் தொடர்பு சேனல்களை சீர்குலைக்கவும், பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு பிரிவில் அவர்களின் நடவடிக்கைகளை மேலும் கடினமாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

பொதுமக்கள் தங்கள் சிம் கார்டுகளை பாதுகாப்பது குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பல நேரங்களில் மக்கள் தங்கள் நண்பர்களுக்கு சிம்களைக் கொடுப்பது கண்டறியப்பட்டுள்ளது, பின்னர் அவர்கள் உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தாமல் தீவிரவாதிகளுக்கு சிம் கார்டுகளை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஜம்மு பிரிவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

"சமீபத்தில் ஸ்ரீநகர், கந்தர்பால், அனந்த்நாக், பட்காம், புல்வாமா, ஷோபியன், பந்திபோரா, சம்பா மற்றும் கிஷ்த்வார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகளை வழங்குவதைத் தடுப்பதையும், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளின் ஒருமைப்பாட்டைப் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன" என்று ஜே & கே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Advertisment
Advertisements

ஆங்கிலத்தில் படிக்கவும்:

J&K: Police arrest 30 in a week for giving SIMs to militants

கடந்த ஆண்டில் 30 பேருக்கு சொந்தமான அட்டைகளை தீவிரவாதிகள் வாங்கியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மற்றொரு மூத்த ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, பள்ளத்தாக்கில் கே.ஒய்.சி விதிமுறைகள் மிகவும் கடுமையானதாக இல்லாததால் தீவிரவாதிகள் போலி பெயர்களில் சிம் கார்டுகளை வாங்கி பயன்படுத்தியதாக தெரிவித்தார். 2021-22 ஆம் ஆண்டில், பயங்கரவாத நடவடிக்கைகள் ஜம்மு பிரிவில் அதிகரித்ததால் பயோமெட்ரிக் சரிபார்க்க சிம் கார்டு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இதனால் போலி சிம் கார்டுகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இதையடுத்து பயங்கரவாதிகள் சிம் கார்டுகளை பெற உள்ளூர்வாசிகளை பயன்படுத்தினர். இவர்கள் சிம் கார்டுகளை தெரிந்தவர்களிடம் அல்லது அவர்களின் பெயரில் வாங்கி பயங்கரவாதிகளுக்கு கொடுப்பார்கள். உள்ளூர் தீவிரவாதிகள், பல சந்தர்ப்பங்களில், தங்கள் மனைவிகள் அல்லது பிற உறவினர்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தினர்" என்று அந்த அதிகாரி கூறினார்.

பதிவுசெய்யப்பட்ட சிம் பயனருக்கு அதன் சட்டவிரோத பயன்பாடு குறித்து தெரியாத வழக்குகளில் காவல்துறையினர் கட்டாய நடவடிக்கை எடுக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், ஒரு பயங்கரவாதி பயன்படுத்தும் சிம் கார்டு உங்கள் பெயரில் இருந்தால், சட்டம் அதன் போக்கை எடுக்கும், மேலும் நீங்கள் கணிசமான சிக்கலை சந்திக்க நேரிடும்" என்று அந்த அதிகாரி கூறினார்.

பொதுமக்கள் தங்கள் சிம் கார்டுகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் போலீசார் கவனம் செலுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் தங்கள் பெயர்களில் வழங்கப்படும் சிம் கார்டுகளில் கவனமாக இருக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபோன்ற அட்டைகள் ஏதேனும் பயங்கரவாதிகள் மற்றும் பிற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அந்த அதிகாரி கூறினார்.

Jammu Kashmir Militants

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: