மல்யுத்த வீராங்கனைகளின் 6 போலீஸ் புகார்களில், விசாரணையில் 4 புகாரில் புகைப்பட ஆதாரம் கிடைத்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பெண் மல்யுத்த வீரர்கனைகளின் 6 புகார்களில் 4 புகார்களில் புகைப்பட ஆதாரங்களும், பாலியல் துன்புறுத்தல் புகாரில் 3 வீடியோ ஆதாரங்களும் போலீஸ் விசாரணையில் கிடைத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது.
6 வீராங்கனைகளின் பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் பின்தொடர்தல் புகார்களின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 1500 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் வியாழக்கிழமை தாக்கல் செய்தனர். இந்த புகார் ஜூன் 22ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
மைனர் பெண் புகார்தாரர் மாஜிஸ்திரேட் முன் தனது வாக்குமூலத்தை திரும்பப் பெற்றதால், சிங் மீதான போக்சோ சட்டத்தை ரத்து செய்யும் அறிக்கையையும் போலீசார் பதிவு செய்தனர்.
குற்றப்பத்திரிகை ஆறு மல்யுத்த வீரர்களின் சாட்சியங்கள், 70-80 சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அழைப்பு விவர பதிவுகள் போன்ற தொழில்நுட்ப ஆதாரங்களை கொண்டுள்ளது. புகார்களை உறுதிப்படுத்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை போலீசார் அதில் இணைத்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ஆறு மல்யுத்த வீரர்கள் தங்கள் புகார்களில் பல சம்பவங்களைக் கூறியதால் ஒவ்வொரு புகாரையும் தனித்தனியாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளோம். ஒவ்வொரு புகாருக்கும், உறுதிப்படுத்தும் சாட்சிகள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மேற்கோள் காட்டியுள்ளோம். ஆறு புகார்களில், நான்கில் புகைப்பட ஆதாரங்களை இணைத்துள்ளோம் என்றார். போட்டி நடைபெற்ற இடங்களில் நடந்த சம்பவங்கள், வெவ்வேறு நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்களை ஆதாரமாக இணைக்கப்பட்டுள்ளது என்றார்.
பதக்க விழாக்கள், குழு புகைப்படங்கள் மற்றும் பிற நிகழ்வுகளின் புகைப்படங்கள் ஆதராமாக சமர்பிக்கப்பட்டுள்ளது.
புகார்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பல சம்பவங்கள் மல்யுத்த சம்மேளனத்தின் அலுவலகம், போட்டிகள், முகாம்கள் மற்றும் நிகழ்வுகளில் நடந்துள்ளது. குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் இணைத்துள்ள சில வீடியோக்களையும் கண்டறிந்துள்ளோம். இனி, குற்றத்தின் தன்மை மற்றும் தண்டனையை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். புகார்கள் தொடர்பான தொழில்நுட்ப ஆதாரங்களை நாங்கள் ஒன்றாக இணைத்துள்ளோம்” என்று ஒரு அதிகாரி கூறினார்.
ஏப்ரல் 28 அன்று பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவர், அவர் பாயில் அமர்ந்திருந்த போது சிங் தனது டி-சர்ட்டை பிடித்து இழுத்து, சுவாச சோதனை என்ற பெயரில் சிங் கையை தனது மார்பின் மீது வைத்தார் என்று குற்றம் சாட்டினார்.
மற்றொரு மல்யுத்த வீரர், ஒரு போட்டிக்குப் பிறகு, சிங் ஒரு குழு புகைப்படத்தின் போது தகாத முறையில் தொட்டதாகவும், அவள் எதிர்த்தபோது "பலவந்தமாக அவளை தோளில் பிடித்துக் கொண்டதாகவும்" குற்றம் சாட்டினார். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை மற்றொரு மல்யுத்த வீராங்கனையும் புகைப்படம் எடுக்கும் போது தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறினார்.
குற்றப்பத்திரிகையில் ஆறு மல்யுத்த வீராங்கனை குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய சுமார் 22 சாட்சிகளின் விரிவான சாட்சியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதோடு செல்போன்களில் இருந்தும் கடந்த ஆண்டு CDRகளின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளின் CDRகள் உடனடியாகக் கிடைக்காததால், கடந்த ஆண்டு அழைப்பு விவரங்கள் மற்றும் தொலைபேசி பதிவுகளை மட்டுமே தங்களால் அணுக முடிந்தது என்று மூத்த போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெறப்பட்ட 6 புகார்களில், சிலர் இது போன்ற சம்பவங்கள் 2012 முதல் 2018 வரையில் நடந்ததாக கூறியுள்ளனர். இருப்பினும், 4 வழக்குகளில் CDRகளைப் பெற முடிந்தது. தொழில்நுட்ப ஆதாரமாக CDRகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. சில சந்தர்ப்பங்களில் சிங்கின் இருப்பிடத்தையும் நாங்கள் மேற்கோள் காட்டியுள்ளோம், ”என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.