scorecardresearch

கள நிலவரத்திற்கேற்ப தடுப்பூசி கொள்கை வேண்டும்; கட்டாய கோவின் பதிவு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து

‘Policy must change as per ground situation’: Supreme Court on mandatory CoWin registration for Covid-19 vaccine: டி.ஒய்.சந்திரசூட், எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரபீந்தரபட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு களநிலவரத்தைத் புரிந்துக் கொண்டு கொள்கை வகுக்க வேண்டும் எனவும், தொழில்நுட்ப விவரங்களை கவனிக்காமல் எப்படி கோவின் பதிவை கட்டாயமாக்கினீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

கள நிலவரத்திற்கேற்ப தடுப்பூசி கொள்கை வேண்டும்; கட்டாய கோவின் பதிவு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து

இந்தியாவின் ”டிஜிட்டல் பிளவுகளை” மனதில் கொள்ளாமல், தடுப்பூசி கோவின் பதிவை கட்டாயமாக்கியது உட்பட, தடுப்பூசி கொள்கையில் “பல்வேறு குறைபாடுகளை” உச்சநீதிமன்றம் திங்களன்று சுட்டிகாட்டியபோது மத்திய அரசு ஒரு கடினமான இடத்தில் இருந்தது.

டி.ஒய்.சந்திரசூட், எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரபீந்தரபட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு களநிலவரத்தைத் புரிந்துக் கொண்டு கொள்கை வகுக்க வேண்டும் எனவும், தொழில்நுட்ப விவரங்களை கவனிக்காமல் எப்படி கோவின் பதிவை கட்டாயமாக்கினீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

“நிலைமை மாறும் என்று நீங்கள் தொடர்ந்து கூறுகிறீர்கள், ஆனால் அரசு  தங்கள் காதுகளை தரையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் டிஜிட்டல் இந்தியா என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் உண்மையில் கிராமப்புறங்களில் நிலைமை வேறாக உள்ளது. ஜார்க்கண்டில் இருந்து ஒரு கல்வியறிவற்ற தொழிலாளி ராஜஸ்தானில் எவ்வாறு பதிவு பெறுவார்? இந்த டிஜிட்டல் பிரிவை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள் என்று எங்களிடம் கூறுங்கள் ”என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் கேட்டனர்..

“நாடு முழுவதும் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். நீங்கள் கள நிலைமையை அறிந்து அதற்கேற்ப கொள்கையை மாற்ற வேண்டும். நாங்கள் அதைச் செய்ய வேண்டியிருந்தால், நாங்கள் அதை 15-20 நாட்களுக்கு முன்பே செய்திருப்போம். ” என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஒரு நபர் இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கு பதிவு செய்வது கட்டாயம், அதேநேரம் கிராமப்புறங்களைப் பொருத்தவரை, அங்கு சமூக மையங்கள் உள்ளன அங்கு ஒரு நபர் தடுப்பூசி பெற பதிவு செய்ய முடியும், என்று மேத்தா பதிலளித்தார்.

இந்த செயல்முறை சாத்தியமானது என்று அரசாங்கம் கருதுகிறதா என்று மேத்தாவை கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கொள்கையை ஆவணமாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

நாட்டில் கொரோனா நிலைமையை நிர்வகிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக் கொண்டது.

பல்வேறு வயதினருக்கான தடுப்பூசி விநியோகத்தில் முரண்பாடு உள்ளிட்ட தடைகள் இருக்கும் போதும், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா முழுவதிலும் தடுப்பூசி போட அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது. 45 வயதிற்கு மேற்பட்ட ஒட்டுமொத்த மக்களுக்கும், மத்திய அரசு தடுப்பூசிகளை வாங்குகிறது, ஆனால் 18-44 வயதினருக்கான  கொள்முதலில் வேறுபாடுகள் உள்ளது. உற்பத்தியாளர்களால் மாநிலங்களுக்கு 50 சதவீதம் கிடைக்கிறது மற்றும் விலை மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது, மீதமுள்ளவை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டும் . இதற்கு உண்மையான அடிப்படை என்ன? ” நீதிமன்றம் கேட்டிருந்தது.

பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்கள் வெளிநாட்டு தடுப்பூசிகளை வாங்குவதற்கான உலகளாவிய டெண்டர்களை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பதைக் குறிப்பிடுவதன் மூலம் தடுப்பூசி கொள்முதல் கொள்கை குறித்தும் நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டது. பிரஹன்மும்பை மாநகராட்சி போன்ற மாநகராட்சிகளுக்கு கூட ஏலம் கிடைத்துள்ளது என்று நீதிபதிகள் கூறினர்.

“இது மாநில அல்லது நகராட்சி நிறுவனத்தால் தடுப்பூசி வாங்க முடியும் என்பது மத்திய அரசின் கொள்கையா அல்லது மத்திய அரசு அவர்களுக்காக ஒரு நோடல் ஏஜென்சி போல வாங்கப் போகிறதா? இது குறித்த தெளிவு மற்றும் இந்தக் கொள்கையின் பின்னணியில் உள்ள பகுத்தறிவை நாங்கள் தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம், ”என்று நீதிபதிகள் கூறினர்.

மத்திய அரசை விட மாநிலங்கள் ஏன் தடுப்பூசிகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டது. இந்த பிரச்சினைகள் மற்றும் கவலைகளுக்கு பதிலளிக்க மத்திய அரசிற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Policy must change as per ground situation sc on mandatory cowin registration for covid 19 vaccine