Atal Bihari Vajpayee Death News: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5.05 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு சர்வ கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். 7 நாட்கள் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17) விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னர் வந்த செய்தி கீழே:
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்த அரசியல்வாதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அவரைப் பார்க்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்துள்ளார்கள்.
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை பார்க்க விரையும் அரசியல்வாதிகள்
வாஜ்பாய் அவர்களின் உடல் நலம் பற்றி விசாரிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வாஜ்பாயை நேரில் காண சென்றார். அவரைப் பார்த்துவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராஜ்நாத் சிங் “வாஜ்பாய் உடல் நிலையில் மாற்றம் ஏதும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் டெல்லியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை நேரில் பார்க்க விரைந்தார்.
பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜீ போன்றோர் அவர்களின் அலுவலக வேலைகளை நிறுத்திவிட்டு டெல்லி விரைந்துள்ளனர்.
இன்றைய அரசியல் கொள்கைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கொள்கைகளைக் கொண்டவர் அடல் பிஹாரி வாஜ்பாய் என மம்தா பானர்ஜி புகழாரம்.
மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா ஆகியோரும் டெல்லிக்கு கிளம்ப இருக்கிறார்கள்
வாஜ்பாய் அவர்களின் வீட்டில் குவியும் மத்திய அமைச்சர்கள்
மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் ஜித்தேந்திர சிங் போன்றோர்கள் வாஜ்பாய் அவர்களின் வீட்டிற்கு சென்று உள்ளனர்.
வாஜ்பாய் அவர்களின் உடல்நிலைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிய
அவர் நலம் பெற்று திரும்பிவர ஆங்காங்கே சிறப்பு பிரார்த்தினைகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
#Punjab: Special prayers offered for former PM #AtalBihariVajpayee at Sakteshwar Mahadev Ashram in Ludhiana. pic.twitter.com/lizvPYcGmw
— ANI (@ANI) 16 August 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.