Advertisment

கேரள நெடுஞ்சாலை திட்டம்; சி.பி.எம் – பா.ஜ.க இடையே உரிமை போட்டி

கேரளாவில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்யும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்; வளர்ச்சியை சாத்தியமாக்கியது சி.பி.எம் தான் என உரிமை கொண்டாடும் பினராயி விஜயன்

author-image
WebDesk
New Update
கேரள நெடுஞ்சாலை திட்டம்; சி.பி.எம் – பா.ஜ.க இடையே உரிமை போட்டி

Shaju Philip

Advertisment

Jaishankar vs Vijayan: An elevated Kerala highway and a Centre-vs-Kerala gridlock: அவரது வழக்கமான பயணங்களின் தரத்தின்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரளா பயணம் என்பது குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்க வேண்டும். இருப்பினும், ஜெய்சங்கர் கேரளாவில் மூன்று நாட்கள் தங்கியிருப்பது பா.ஜ.க மற்றும் மாநிலத்தில் ஆளும் CPM இடையேயான மோதலின் சமீபத்திய புள்ளியாக மாறியுள்ளது.

குறிப்பாக 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கேரளாவின் வளர்ச்சியில் யாருக்கு அதிக பங்கு என இரு கட்சிகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் ஜெய்சங்கரின் உரையாடல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் விரும்பவில்லை. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI-ன் கீழ் சாலை மேம்பாடு குறித்த ஜெய்சங்கரின் தள ஆய்வை பினராயி விஜயன் விரும்பவில்லை.

இதையும் படியுங்கள்: அரசுப் பணிக்கு தமிழக, கேரளா தேர்வு முறையை பின்பற்ற முடிவு: ராஜஸ்தான் முதல்வர் கெலாட்

இந்த விவகாரம் மாநில சட்டசபையில் கூட புதன்கிழமை பேசப்பட்டது, கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் பி.ஏ.முகமது ரியாஸ், “மத்திய அமைச்சர்கள் பார்வையிடுவதை” கிண்டல் செய்தார், கிட்டத்தட்ட முடிக்கப்பட்ட திட்டங்களின் படங்களை மட்டும் கிளிக் செய்து அவற்றை தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடுவதற்கு பதிலாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களை "கணக்கிட்டு நிரப்ப வேண்டும்" என்று கூறினார்.

அதிகாரப்பூர்வமாக, ஜெய்சங்கரின் வருகை மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய மத்திய அமைச்சர்களை மாநிலங்களுக்கு அனுப்பும் பா.ஜ.க.,வின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

ஜெய்சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள கஜகூடத்தில் உயர்மட்ட நெடுஞ்சாலையில் பணியை ஆய்வு செய்வதைக் காணக்கூடிய ஒரு புகைப்படத்தைக் குறிப்பிட்டு, பினராயி விஜயன் செவ்வாய்கிழமை கூறினார்: “உலகில் பல பிரச்னைகள் நடக்கும் போது, ​​ஒரு பிஸியான வெளியுறவுத்துறை அமைச்சர் நெடுஞ்சாலையைப் பார்க்க வந்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சரின் வருகையின் உள்நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது. இது அடுத்த லோக்சபா தேர்தலை குறிவைத்து... நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்திற்கான புகழை பாஜக எடுத்துக் கொள்ள தேவையில்லை”.

ஆனால், இதற்கு ஜெய்சங்கர் “அரசியலுக்கு மேல் வளர்ச்சி முக்கியம் என கருதும் எவரும் நான் என்ன செய்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடியும். மத்திய அமைச்சர்கள் மத்திய அரசின் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து தாங்கள் சரியாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை என்றால், அவர்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன்,” என பதிலடி கொடுத்தார்.

கேரளாவில் கால் பதிக்கும் முயற்சியில் பா.ஜ.க வளர்ச்சியை முன் நிறுத்தியிருந்தாலும், பா.ஜ.க.,வுக்கு திருவனந்தபுரத்தில் தான் அதிக வாய்ப்பு இருக்கிறது, ஏனெனில், கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களில் அங்கு இரண்டாவது இடத்தைப் பிடித்தது மற்றும் திருவனந்தபுர மாநகராட்சியில் ஆளுங்கட்சியான சி.பி.எம்-க்கு முக்கிய எதிரியாக உருவெடுத்துள்ளது.

தவிர, 2016 ஆம் ஆண்டு கேரளாவில் பா.ஜ.க.,வின் முதல் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நெமோம் சட்டமன்றத் தொகுதி, திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதிக்குள் தான் வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில், திருவனந்தபுர மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில், ஒன்பதில் பா.ஜ.க இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இந்த தொகுதி பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் மற்றும் நாயர்களால் நிரம்பியுள்ளது, அவர்கள் இருவரும் பா.ஜ.க.,வை ஆதரிப்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

2024-ல் கேரளாவில் தனது மக்களவைக் கணக்கைத் திறக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இந்தத் திட்டத்தில் திருவனந்தபுரம் பெரிய அளவில் இருப்பதாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்செயலாக, 2009 ஆம் ஆண்டு முதல் இத்தொகுதியை காங்கிரஸின் சசி தரூர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அவர் ஜெய்சங்கரைப் போன்ற முன்னாள் பிரபல ராஜதந்திரி ஆவார். அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெய்சங்கர், சாதுவான மற்றும் புத்திசாலியான காங்கிரஸின் சசி தரூருக்கு எதிராக போட்டியிடுவதற்கு பொருந்தக்கூடியவராகக் காணப்படுகிறார்.

2014 ஆம் ஆண்டு முதல் நரேந்திர மோடி அரசாங்கத்தால் கேரளாவிற்கு கொண்டு வரப்பட்ட வளர்ச்சி முயற்சிகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களை பா.ஜ.க பெரு முயற்சி எடுத்து பரப்புரை செய்து வருகிறது. கேரளாவில் பல ஆண்டுகளாக தாமதமாகி வரும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு, மாநிலத்தின் முக்கிய கவன ஈர்ப்புகளில் ஒன்றாகும்.

ஆனால் பினராயி விஜயன் அரசும் தேசிய நெடுஞ்சாலைகளின் மேம்பாடு மற்றும் மாநிலத்தில் கெயில் குழாய் போன்ற மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் பெருமை கொள்கிறது. அவர் 2016 இல் கேரளாவில் பதவியேற்றதிலிருந்து, அவரது அரசாங்கத்தின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று மத்திய திட்டங்களுக்கு இடையூறுகளை அகற்றுவதாகும்.

நிலம் கையகப்படுத்துதல் போன்ற விவகாரங்களில் வெளியில் இருந்தும், சொந்த தரப்பிற்குள் இருந்தும் எதிர்ப்பை எதிர்கொண்டு இது சாதிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான இழப்பீட்டுத் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன, நிலம் கையகப்படுத்தும் செலவில் 25 சதவீதத்தை மாநில அரசு ஏற்கும் முடிவு என்பது திட்டங்கள் செயல்படுத்துவதை எளிதாக்கும் நோக்கில் நீண்ட தூரம் செல்லும்.

இதன் ஒரு பகுதியாக, கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் ஏற்கனவே NHAI க்கு NH 66 இன் கேரளா நீட்டிப்புக்காக ரூ. 5,300 கோடி வழங்கியுள்ளது. பினராயி விஜயன் 2026 ஆம் ஆண்டு அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த நடைபாதையில் தயாராக உள்ளார்.

சமீப மாதங்களில் தனது பொது உரைகளில், முதல்வர் தனது ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தை தொடர்ந்து முன்னிலைப்படுத்தினார். "மாநிலத்தில் சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட ஒன்று நிறைவேறிவிட்டது" என்று பெருமிதம் கொள்கிறார்.

கேரள பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் புதன்கிழமை பினராயி விஜயன் மற்றும் முதல்வரின் மருமகன் ரியாஸ் ஆகியோரை கேரள "பங்களிப்பு" தொடர்பாக நேரடியாகத் தாக்கினார். மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்ற முடியாததால் இருவரும் கோபமாக இருப்பதாக குற்றம்சாட்டிய சுரேந்திரன், “ஜெய்சங்கரின் கேரளா வருகையால் அவர்கள் ஏன் பதற்றமடைகிறார்கள்? தற்போதுள்ள திட்டங்களுக்கு ரூ.34,000 கோடியைத் தவிர, மாநிலத்தில் ரூ.21,275 கோடி மதிப்பிலான பிற திட்டங்களை NHAI செயல்படுத்தி வருகிறது. நிலம் கையகப்படுத்தும் செலவில் 25 சதவீதத்தை மட்டுமே மாநில அரசு வழங்குகிறது, நெடுஞ்சாலை மேம்பாட்டுக்கான மீதமுள்ள செலவை மத்திய அரசு ஏற்கிறது, என்று கூறினார்.

கூடுதல் தகவல்கள்: லிஸ் மேத்யூ, டெல்லி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment