scorecardresearch

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் மோடி; தேர்தல் ஆணையத்தை நாடிய திரிணாமுல்!

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கோஷ் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் மோடி; தேர்தல் ஆணையத்தை நாடிய திரிணாமுல்!

Ritika Chopra

Poll panel seeks ministry response over complaint against PM’s photo on vaccination certificates : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் நரேந்திர மோடியின் புகைப்படம் பயன்படுத்தியிருப்பதற்கான காரணத்தை விளக்குமாறு தேர்தல் ஆணையம் சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் புகாரை தொடர்ந்து இந்த கேள்வி எழுப்பப்பட்டது.

நாங்கள் முதலில் உண்மையை அறிய விரும்புகின்றோம். உதாரணமாக, இந்த சான்றிதழ்கள் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களின் பெயர்களில் தான் வழங்கப்படுகிறதா என்பது எங்களுக்கு தெரிய வேண்டும். இது போன்ற விசயங்களில் நாங்கள் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பதில்களை எதிர்பார்ப்போம் என்று அடையாளம் காண விரும்பாத தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் அதிகாரியிடம் இருந்து அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வாரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்க தேர்தல் அதிகாரியிடம், நரேந்திர மோடியின் புகைப்படத்தை பயன்படுத்துவது, ”அதிகாரப்பூர்வ அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துதலாகும்” என்றும், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகவும் உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களில், நரேந்திர மோடி நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். ஒரு அரசியல்வாதியாக ஊர்வலத்தின் போது அவருடைய கட்சிக்கு வாக்குகளை சேகரிக்கிறார். இந்த சூழலில் தடுப்பூசி சான்றிதழ்களில் அவருடைய புகைப்படத்தை பயன்படுத்துவது வாக்களர்களை பாதிக்கும். மேலும் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும் என்று மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் புதன்கிழமை கொல்கத்தாவில் தேர்தல் அதிகாரிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ், இது ஆதரமற்றவை என்றும், கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அறிவிக்கப்பட்டது என்றும் கூறினார். அரசின் ஒரு திட்டம் தேர்தலுக்கு முன்பு அறிவிக்கப்பட்டால் அது அப்படியே தொடர வேண்டும். பெட்ரோல் நிலையங்கள், பதாகைகள் பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை விவரிக்கின்றனர். அவை அனைத்தும் தனியார் நிலங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கோஷ் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Poll panel seeks ministry response over complaint against pms photo on vaccination certificates

Best of Express