Advertisment

விஜய்யின் முதல் மாநாட்டிற்கு வருகையா? புதுச்சேரி முதல்வரின் பதில்

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு தொடர்பான போஸ்டர்களில் தனது புகைப்படம் இடம்பெற்றிருப்பது குறித்த கேள்விக்கு, புதுச்சேரி முதலமைசர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Rangasamy

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை பகுதியில் நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் மாநாடு தொடர்பான போஸ்டர் மற்றும் பேனர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது.

Advertisment

புதுச்சேரியில் ஒட்டப்பட்ட தவெக மாநாடு தொடர்பான போஸ்டரில், முதலமைச்சர் ரங்கசாமியின் புகைப்படம் அதிகளவில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. குறிப்பாக, தவெக மாநாட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்வதாகவும் தகவல் பரவத் தொடங்கின.

இந்நிலையில், இன்றைய தினம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தவெக மாநாடு தொடர்பான போஸ்டர்களில் அவரது புகைப்படம் இடம்பெற்றதை குறிப்பிட்டு, மாநாட்டில் அவர் பங்கேற்பாரா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்பவும், ஒருவர் மீது கொண்ட பற்றுதலுக்காகவுமே புகைப்படங்களை போஸ்டர்களில் இடம்பெறச் செய்வதாகக் கூறினார். இதன் மூலம் போஸ்டர்களில் தனது புகைப்படம் இருந்தது தொடர்பாக பரவிய தகவலுக்கு அவர் முற்றுப் புள்ளி வைத்தார். 

மேலும், வரும் 21-ஆம் தேதிக்குள் புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் எனவும், அதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் கோயில் நிலங்களை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறிய ரங்கசாமி, கோயில் நிலங்கள் விரைவாக பட்டியலிடப்பட்டு அதனை மக்கள் பார்வைக்கு வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மழையின் காரணமாக புதுச்சேரி நகர் பகுதியில் எங்குமே தண்ணீர் தேங்கி நிற்கவில்லை எனக் கூறிய முதலமைச்சர் ரங்கசாமி, முன்பு இருந்ததை விட தற்போது துரிதமாக நடவடிக்கை எடுத்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு உயர்த்தி வழங்கப்படவுள்ள உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் அவர் செய்தியாளர்களிடையே பகிர்ந்து கொண்டார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor Vijay Vijay N Rangasamy Pondicherry Joseph Vijay Tamilaga Vettri Kazhagam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment