புதுச்சேரி அருகே அரசு கல்லூரி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது . இந்த சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் இன்று பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த கொண்டாட்டத்தின் போது சில மாணவர்கள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.