புதுச்சேரியில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாநில சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி,
தீபாவளியன்று (அக்.31) காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் சுற்று வட்டாரங்களின் 100 மீட்டருக்குள் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பட்டாசுகள் வெடிப்பதால் முதியோா், கா்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள், ஆஸ்துமா நோயாளிகள், குழந்தைகள் ஆகியோருக்கு அதிக பாதிப்பு விளைவிக்கும் எனவும், பிறருக்கு இடையூறு இன்றி தீபாவளியை கொண்டாடுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“