Liquor price hike in pondicherry: பாண்டிச்சேரியில் சாராய விலை உயர்ந்திருக்கிறது. இது மதுப் பிரியர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
பாண்டிச்சேரி, ஒரு யூனியன் பிரதேசம். இங்கு மொத்தம் 109 சாராய கடைகள் மற்றும் 90 கள்ளுக்கடைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள சாராயம் மற்றும் கள்ளுக் கடைகள் கலால் துறையால் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது.
புதுச்சேரியில் அண்மையில் விடப்பட்ட ஏலம் மூலம் சாராயம் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. அதாவது, ரூ 40 -ஆக இருந்த ஒரு லிட்டர் சாராயத்தின் விலை, 5 ரூபாய் 84 காசுகள் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது.
பாண்டிச்சேரி சாராயம் வடி ஆலை இ-டெண்டர் மூலம் 1 கோடியே 30 லட்சம் லிட்டர் எரிசாராயம் கொள்முதல் செய்கிறது. கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால், சாராய விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சாராயத்தின் விலையை புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ள நிலையில் கருவடிக்குப்பம் பகுதியில் தனியார் சாராயக் கடை ஒன்றில் குறைந்த விலைக்கு சாராயம் விற்கப்படுவதாக போஸ்டர் ஒட்டி விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். 50 மில்லி 5 ரூபாய், 100 மில்லி 10 ரூபாய், கால் பாட்டில் 20 ரூபாய், முழு பாட்டில் 25 ரூபாய் என விலை குறைத்து விற்கப்படுவதாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். தவிர, இலவச இணைப்பாக சோடா, கலர் கிடைக்கும் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.