புதுச்சேரியில் காவல்துறை உயரதிகாரிகள் திடீர் இடமாற்றம்

புதுச்சேரியில் டி.ஐ.ஜி.க்கள் மற்றும் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை நிலை ஆளுநரின் உத்தரவை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் டி.ஐ.ஜி.க்கள் மற்றும் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை நிலை ஆளுநரின் உத்தரவை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Pondicherry police head

புதுச்சேரியில் டி.ஐ.ஜி.க்கள் மற்றும் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் திடீரென  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

அதன்படி, புதுச்சேரி மாநிலக் காவல் துறையில் தலைமையிட நிா்வாகப் பிரிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய சத்தியசுந்தரம், தற்போது சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளாா். ஏற்கெனவே சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்த பிரிஜேந்திரகுமாா் யாதவ் ஆயுதப் படைப் பிரிவு மற்றும் பயிற்சி மையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவின் முதுநிலை காவல் கண்காணிப்பாளராக இருந்த நாரா சைதன்யா, அங்கிருந்து மாற்றப்பட்டு குற்றம் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். குற்றம் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக இருந்த கலைவாணன், புதுச்சேரி சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி கிழக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக இருந்த லட்சுமி சௌசன்யா, காரைக்கால் காவல் கண்காணிப்பாளராக இடமாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக தற்போது காவல் நிா்வாகப் பிரிவு கண்காணிப்பாளா் இஷாசிங், கிழக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Advertisment
Advertisements

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Police Pondicherry

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: