புதுச்சேரி: சித்திரை மாதம் பிறப்பதற்கு முன்பாகவே வெயில் தாக்கம் கடுமையாகவே இருந்தது. மேலும், கொரோனா பரவல் இருந்ததால் மார்ச் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் பள்ளிகள் பட்டு அவசர அவசரமாக முழு ஆண்டு தேர்வு வெயில் காரணமாக முடிக்கப்பட்டு கடந்த வாரம் தான் கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளும் அறிவிக்கப்பட்டது
20 தேதி முதல் 23ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. இதனால், வானிலை ஆய்வு மையமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து வெயில் தாக்கத்தை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி நோய்வாய் பட்டவர்கள் குழந்தைகள் வயதானவர்கள் வெளியே வர வேண்டாம் உத்தரவு பிறப்பித்தது. பெரும்பாலானவர்கள் வெயில் தாக்கத்தால் பகலில் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி முதல் புதுச்சேரி மாநிலத்தில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசு தொடங்கியது. அது படிப்படியாக மாறி காலை 7 மணிக்கு இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய ஆரம்பித்தது. வெயில் தாக்கம மறைந்து இடியுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை நடை பயிற்சி வந்தவர்கள் பயிற்சியை முடிக்காமல் கோடை மழையை ரசிக்க கடற்கரையிலேயே நின்று விட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil