Advertisment

'சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்டங்கள் இல்லை': புதுச்சேரி அரசு அதிரடி

'சுருக்குமடி வலை பயன்படுத்தினால் நலத்திட்டங்கள் இல்லை' என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
சுருக்குமடி வலை

சுருக்குமடி வலை

புதுச்சேரி கடல் பகுதிகளில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு நலத்திட்டங்கள் நிறுத்தப்படும் என, புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரித்துள்ளது.

Advertisment

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

புதுச்சேரி கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம், புதுகுப்பம் மீனவ கிராமம் வரை உள்ள அனைத்து மீனவர்களும், புதுச்சேரி கடல் பகுதிகளில் சுருக்குமடி வலை மீன்பிடி முறையை பயன்படுத்த கூடாது.

கடந்த சில நாட்களாக புதுச்சேரி கடல் பகுதிகளில் சுருக்குமடி வலை மீன்பிடி முறையை, புதுச்சேரி மீனவர்கள் ஒரு சிலர் பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் மீனவ கிராமங்களில் அசாதாரண சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.

Advertisment
Advertisement

 புதுச்சேரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் கடலின் சுற்றுச்சூழல், மீன்வளம், பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களுக்கு கேடு விளைவிக்கும்.

இந்த ஹூக்கான் (எ) அக்டி மீன்பிடி முறைகளை புதுச்சேரி கடல் பகுதிகளில் பயன்படுத்த கூடாது என எச்சரிக்கை விடப்படுகிறது.

மீறினால், மீனவர்களின் நலத்திட்ட உதவிகள் நிருத்தப்படும். மேலும் அவர்கள் மீது மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் 2008ன் படி நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Fishermen Puduchery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment