/indian-express-tamil/media/media_files/2025/05/04/fQuaT9wg4exhcoZgG3uO.jpg)
புதுச்சேரி போலீசார் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் மன்றம் என்ற பெயரில் போலீஸ் நிலையங்களில் பொதுமக்களிடம் குறை கேட்டு வருகின்றனர்.
அதன்படி மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது. புதுவை பெரியகடை போலீஸ் நிலையத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் கொண்டு பொதுமக்களிடம் கலந்து
குறைகேட்டார்.
மேட்டுப்பாளையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன், மடுகரை புறக்காவல் நிலையத்தில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி, அரியாங்குப்பத்தில் தெற்கு
பகுதி போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம்,போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரவின்திரிபாதி, போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வம், மோகன் குமார்,
சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா.சைதன்யா,போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டனர்.
இந்த குறைதீர்வு முகாமில் 43பெண்கள் உள்பட 204 பேர் கலந்துகொண்டு 73 புகார்களை அளித்தனர். அவற்றில் பெரும்பாலானவை நிலப்பிரச்சினை, குடும்ப பிரச்சினை, வீட்டை காலி செய்வது உள்ளிட்டவையாக இருந்தது.
அந்த புகாரில் 26 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற புகார்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
புதுச்சேரி - பாபு ராஜேந்திரன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.