பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான தருண் விஜய் கடந்த 6-ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது மரியாதை நிமித்தமாக தமிழகத்தை ஆண்ட மன்னன் இராசேந்திர சோழனின் படத்தைப் பரிசளித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இராசேந்திரசோழனின் வரலாறுகளை இரண்டு தலைவர்களும் நினைவு கூர்ந்தனர். ராஜேந்திர சோழனின் வரலாற்று மிக்க செயல்பாடுகளில் ஆர்வம் காட்டிய மத்திய அமைச்சர், இந்த புகைபடத்தை தனது அலுவலகத்தில் மாட்டிக் கொள்ளவேண்டும் என்ற முடிவெடுத்தார். எனவே, இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இராசேந்திர சோழனின் புகைப்படமும் உள்ளது.
இராசேந்திர சோழன் : இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.
எஸ் பேங்க் விவகாரம் - யாருக்கெல்லாம் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?...
இராஜராஜனின் ஆட்சியின் 14ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது. இந்தச் சாதனையை இராஜேந்திரனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.
தகவல் - விக்கிப்பீடியா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil