Advertisment

யோகா, வெதுவெதுப்பான நீர்... கொரோனாவில் மீண்டவர்களுக்கு புதிய நெறிமுறைகள் அறிவிப்பு

வெதுவெதுப்பான நீர், பாலுடன் ஒரு சியாவன்பிராஷ் லேகியம் ஆகியவை அமைச்சகத்தின் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ளன

author-image
WebDesk
New Update
யோகா, வெதுவெதுப்பான நீர்... கொரோனாவில் மீண்டவர்களுக்கு புதிய நெறிமுறைகள் அறிவிப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் ‘கோவிட் -19க்குப் பிந்தைய மேலாண்மை நெறிமுறையை வெளியிட்டது. தினசரி யோகா பயிற்சி, காலை அல்லது மாலை நடைப்பயிற்சி, வெதுவெதுப்பான நீர், பாலுடன் ஒரு சியாவன்பிராஷ் லேகியம் ஆகியவை அமைச்சகத்தின் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ளன.

Advertisment

அமைச்சகத்தின் முக்கிய பரிந்துரைகள்:

முகக்கவசம் , கை மற்றும் சுவாச ஆரோக்கியத்தைப் பேணுதல் மற்றும் சமூக விலகல் நெறிமுறையை கடைபிடிக்க வேண்டும்;

வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்;

கொரோனா தொற்றுக்கு எதிராக ஆயுஷ்  அமைச்சகம் பரிந்துரைத்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்;

உடல்நலம் நன்றாக இருந்தால் வீட்டு வேலைகள் செய்யலாம். தொழில்முறை பணிகள் படிப்படியாக மேற்கொள்ள வேண்டும்;

யோகாசனம் மற்றும் பிராணயாமா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.  தினசரி  நடைபயிற்சி, உடல்நலத்திற்கு ஏற்றவாறு லேசான முதல் மிதமான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளல்லாம்;

சமவிகித மற்றும் சத்தான உணவு, போதிய தூக்கம் மற்றும் ஓய்வு  ஆகியவற்றையும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன;

மது, புகையிலை, போதைப்பொருள்களை தவிர்க்க வேண்டும்;

மருத்துவர்களின் பரிந்துரையின்படி, கொரோனா தொற்று மற்றும் இணை நோய்களுக்கு  மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்;

உடல் வெப்பநிலை, இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு போன்றவற்றை வீட்டில் இருந்தாவாறே  கண்காணிக்கவும்;

தொடர்ந்து வறட்டு இருமல் / தொண்டை வலி ஏற்பட்டால்,  நீராவியை உள்ளிழுக்கவும்;

உயர் தர காய்ச்சல், மூச்சுத் திணறல், விவரிக்கப்படாத மார்பு வலி போன்ற எச்சரிக்கை அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

மருத்துவமனைகளில் கடைப்பிடிக்க வேண்டிய பரிந்துரைகள்: 

சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய 7 நாட்களுக்குள் (நேராகவோ / தொலைபேசி வாயிலாகவோ) முதற்கட்ட  செக்அப்  செய்யப்பட வேண்டும்.

முதற்கட்ட செக்-அப்  சிகிச்சைக்குப் பின், மேலதிக மருத்துவ விசாரணைக்கு அருகிலுள்ள தகுதிவாய்ந்த அலோபதி / ஆயுஷ் மருத்துவரிடம் செல்லலாம்.

பல சிகிச்சை முறைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஏதேனும் அறிகுறிகளைத் தொடர்ந்து அனுபவித்தால் அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment